Monday, November 7, 2011

கிறித்துவம் அழித்த ஆப்கனும் புத்தம் அழித்த தமிழீழமும்

                                                      பக்கம் 60  விலை :ரூ.30௦/ -  தொடர்புக்கு..... 94896 66817 
நூலில் இருந்து.......

குடித்தல் என்பது கிறித்துவ நாகரிகத்தின் பழைய நண்பனாகும். எனவே, அது இப்பொழுது பழைய போதைப்பொருளாகிவிட்டது. அவர்களுக்கு எல்லாமே புதிது புதிதாக வேண்டும். இது மேலும் கிறித்துவ நாகரிகத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்

நேட்டோ தலைமையில் = கொலம்பஸ் திருடன் = ஜாவிது திருடன் மோசஸ் தான் தேர்ந்தெடுத்த மக்களுக்காக ஜாவிதை அனுப்புகிறார். (மோசேயின் 4ஆம் புத்தகம், 13ஆம் அதிகாரம்)
கொலம்பஸ், செவ்விந்தியர்களின் தங்கம், பட்டு, நறுமணப் பொருட்களைக் கொள்ளையிட அன்று அனுப்பப்பட்டார். இன்று, நேட்டோ படைகள் அனுப்பப்படுகின்றன ஆப்கனுக்கு.... எதற்காக? விலையுயர்ந்த கற்கள், தாமிரம் மற்றும் தாது வளங்களைக் கொள்ளையிட..... புதிய ஆயுதங்களைச் சோதனையிட....


அமெரிக்கா ஓர் நடுநிலையான நாடல்ல.... உலகின் முதன்மையான பயங்கரவாத அரசு.... அவர்கள் தலைமையில் ஈழம் அமைந்தாலும் அங்கு கருணாவைப்போல் இன்னொரு பொம்மை அதிபர் உருவாவார். பாலியல் சுற்றுலா தளமாக யாழ்ப்பாணம் மாறும்....

தமிழ்நாட்டில் நீதிக்கட்சியும், பெரியாரும் பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் எனக்கூறி, வெள்ளையரை ஆதரிக்கும் தவறான முடிவை எடுத்தனர். வெள்ளையரை ஆதரிப்பது என்பது, கிறித்துவத்தை ஆதரிப்பது, கிறித்துவ மயமாக்குவதுடன் தொடர்புடையது. இந்த நாடு காலனிய ஆதிக்கத்திற்கு உட்படுவதையும் ஆதரிப்பதாகும்....

இந்தியாவின் தேக்க நிலைக்கு பிரிட்டனின் முதலாளித்துவம் முற்றுப்புள்ளி வைத்து, இந்தியாவில் முதலாளித்துவத்திற்கு வழிவகுக்கும். அதன் உடன் விளைவாக, பாட்டாளி வர்க்கம் தோன்றி புரட்சி செய்யும் என நம்பினார். ஆனால், பிரிட்டனால் அழித்தொழிக்கப்பட்ட பாரம்பரியமான தொழில்கள், தொழில்நுட்பங்கள் பற்றியெல்லாம் காரல் மார்க்ஸ் கவலைப்படவில்லை. விளைவுகளை முன்நிறுத்துவது என்பது மேற்கத்திய சிந்தனையின் கூறுதான். அதற்கு காரல் மார்க்சும் பலியாகியிருந்தார் என்பதே உண்மை….

நாம் அறம் சார்ந்த ஓர் போர்க்களத்தில் இருந்தால், அதற்காக நாம் முழுமையாக அர்பணிப்புணர்வுடன் ஈடுபட்டால், எத்தகைய எதிரியையும் வெல்ல முடியும்


விடுதலைப்புலிகளின் எழுச்சி தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு ஓர் உந்துசக்தியாக விளங்கியது. வெறும் போராட்டம் மட்டும் நடத்தாமல், மக்களுக்கான அரசாங்கத்தையும் நடத்தியவர்கள் அவர்கள். எனினும், காட்டிக் கொடுத்தலாலும், கிறித்துவ, இந்து, புத்தஇஸ்லாமிய சக்திகளாலும் ஒன்றிணைந்து அழிக்கப்பட்டுவிட்டார்கள். நார்வே மூலமாக மேற்குலகமும் தமிழர்களுக்கு தீங்குவிளைவித்து விட்டது. இத்தகைய இக்கட்டான நிலையிலும் தேசியத்தலைவவர் பிரபாகரன் ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியாமல்  போராடி  தமிழர் மரபின் தொடர்ச்சியாக விளங்குகின்றார்.

தமிழர் மரபான முருகனும், திருவள்ளுவமும், வள்ளலாரும், வைகுண்டசாமியும் தமிழர்களின் பாரம்பரிய பெருமிதங்கள். இவர்களை விட்டுவிலகினால், நீங்கள் தமிழர் மண்ணிலிருந்தும், இன,மொழி அடையாளங்களிலிருந்து பிடுங்கி எறியப்படுவீர்கள்…..

Wednesday, September 14, 2011

கடைசிச் சந்திப்பில் மோதிக் கொண்ட கோத்தாபயவும் பிளேக்கும் –அம்பலப்படுத்துகிறது விக்கிலீக்ஸ்


[ சனிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2011, 16:17 GMT ] [ கார்வண்ணன் ]
போர் முடிவுக்கு வந்தவுடன் ஐ.நாவையும், அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவையும் சிறிலங்காவை விட்டு வெளியேற்றுவதிலேயே பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச குறியாக இருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்புக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றிய றொபேட் ஓ பிளேக் சிறிலங்காவில் தனது பணிகளை முடித்து வெளியேறும் போது, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கடைசியாகச் சந்தித்த போதே அவர் ஐ.நா மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஆகியவற்றின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த அடுத்த நாள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

போர் முடிந்து விட்டதால் இனிமேல் சிறிலங்காவில் அனைத்துலக செஞ்சிலுவை குழுவுக்கு வேலை இல்லை என்றும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

போர் வலயத்தில் கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் விடயத்தில் ஐ.நா மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை தொடர்புபட அனுமதிக்க முடியாது என்றும், அவர்களின் எதிர்மறையான அணுகுமுறையே அதற்குக் காரணம் என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

அவர்களின் அறிக்கைகள் உணர்வுகளைக் கிளறி விடுவதுடன், பிளவுகளை அதிகமாக்கி, நல்லிணக்க வாய்ப்புகளை கெடுத்து விடும் என்றும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனை வன்மையாக நிராகரித்த பிளேக், மனிதாபிமான நெருக்கடிகளின் போது அனைத்துலக செஞ்சிலுவைக் குழு சிறிலங்கா அரசுக்கு மகத்தான உதவிகளை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இருந்தபோதும் கோத்தாபய ராஜபக்ச அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவோ ஐ.நாவோ சிறிலங்கா அரசுக்கு உதவி வழங்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

சிறிலங்கா அரசதரப்பில் சில குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்ட கோத்தாபய ராஜபக்ச, அனைத்துலக அமைப்புகளில் ஆசியர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்றும வலியுறுத்தியுள்ளார்.

அவர்களால் தான் சிறிலங்கா அரசாங்கத்தையும், இராணுவத்தையும் அதிகம் புரிந்து கொள்ள முடியும் என்றும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

Tuesday, June 7, 2011

Wednesday, May 18, 2011

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்


பழ. நெடுமாறன்
First Published : 18 May 2011 02:36:51 AM IST

Last Updated : 18 May 2011 09:31:31 AM IST

மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.

தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.

"பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.

ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.

1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.

எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.

ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.

காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.

ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.

இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!

கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.

நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.

1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.

1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.

பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.

1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.

தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.

அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?

நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?

தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?

இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!

உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.

திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.

ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.

உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.

மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?

கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.

பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?

""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்''

Monday, April 11, 2011

ஈழப் போரில் கருணா குடும்பத்தின் சாட்சியம்





செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011 10:03

வன்னிப் போரில் தமிழீழ தேசம் சந்தித்த பேரழிவுக்கும், பின்னடைவுக்குமான மூலகாரணங்களை கண்டறிவதற்கான தேடல் உலகத் தமிழர்களிடையே தொடரும் நிலையில், ‘முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த மர்ம நபர்’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு இதழல்களுக்கு முன்னர் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோம். இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

வன்னிப் போரில் தமிழீழ தேசம் சந்தித்த பேரழிவுக்கும், பின்னடைவுக்குமான மூலகாரணங்களை கண்டறிவதற்கான தேடல் உலகத் தமிழர்களிடையே தொடரும் நிலையில், ‘முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த மர்ம நபர்’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு இதழல்களுக்கு முன்னர் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தோம். இக்கட்டுரையின் தொடர்ச்சியாக ‘தந்திரிகளின் மறுமுகம்’ என்ற மகுடத்தின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

இறுதிப் போரில் மக்களைப் பாதுகாப்பதற்காக எத்தகையை அர்ப்பணிப்புக்களைப் புரிவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருந்தார்கள் என்பதையும், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், வன்னி மக்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாகப் பொய்யுரைத்து சிங்கள-இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு உறுதுணை புரிந்த அரசியல்வாதிகள், பரப்புரையாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் மறுமுகத்தை வெளிக்கொணர்வதே இத்தொடர் கட்டுரைகளின் நோக்காகும். இதில் வெளிக்கொணரப்படும் உண்மைகளை நிரூபிக்கும் சில கடிதங்களையும் வெளியிடுவதற்கு நாம் முடிவு செய்துள்ளோம். இதுவரை காலமும் மிகவும் அந்தரங்கமான முறையில் பேணப்பட்டு வந்த இக்கடிதங்களை, காலத்தின் தேவை கருதி இப்பொழுது நாம் வெளிக்கொணர்கின்றோம்.

இந்த வகையில் இவ்வாரத்திற்கான கட்டுரையில், போர்நிறுத்தத்தை ஏற்படுத்தி மக்களின் துயர்துடைக்கும் நோக்கத்துடன் ஒரேயொரு நோக்கத்துடன், தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடனும், அவரது புதல்வி கனிமொழியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தொடர்பாடல்களைப் பதிவு செய்கின்றோம்.

. . .

2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்: வன்னி மேற்கின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்திருந்த சிங்களப் படைகள், கிளிநொச்சியை மையப்படுத்தித் தமது வலிந்த தாக்குதல்களை உக்கிரப்படுத்தியிருந்தன. யுத்த விமானங்கள், ஆட்லறி எறிகணைகள், பல்குழல் பீரங்கிக் கணைகள் சகிதம் கிளிநொச்சியையும், அதனை அண்டிய ஏனைய மக்கள் குடியிருப்புக்களையும் இலக்கு வைத்து சிங்களப் படைகள் நிகழ்த்தி வந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் நாள்தோறும் தமிழ் உயிர்கள் நரபலி வேட்டையாடப்பட்டு வந்தன.

மக்களின் இழப்புக்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளும், போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழிக் கவனயீர்ப்பு நடவடிக்கைகளும், தமிழக மக்களிடையே கொந்தளிப்பான சூழலை தோற்றுவித்திருந்தது. இதற்கு ஏறத்தாள ஒரு மாதத்திற்கு முன்னர் 2008 செப்ரம்பர் மாதம் 9ஆம் நாளன்று வவுனியாவில் சிங்களப் படைகளின் கட்டளைப்பீடம் மீது கரும்புலிகளும், வான்புலிகளும் இணைந்து நிகழ்த்திய தாக்குதலில் இந்தியப் படை அதிகாரி ஒருவர் காயமடைந்தமை, தமிழின அழிப்பில் இந்தியா உடந்தையாக இருப்பதைப் பட்டவர்த்தனமாக்கியிருந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் மக்களின் தார்மீகக் குரல் ஓங்கியொலிக்கத் தொடங்கியிருந்தது.

ஏறத்தாள ஏழு மாதங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், காங்கிரஸ் அரசுக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலைகள் கலைஞர் கருணாநிதிக்கு பெரும் சங்கடத்தைத் தோற்றுவித்திருந்தன. காங்கிரஸ் கூட்டணியின் அச்சாணி என்று சோனியா காந்தியால் வர்ணிக்கப்பட்ட கருணாநிதியின் அரசியல் எதிர்காலம்கூட ஒருவகையில் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலைகளால் கேள்விக்குறியாகும் அபாயமும் மேலோங்கத் தொடங்கியிருந்தது. இந்நிலையிலேயே போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் நாடகம் ஒன்றை கருணாநிதி கனக்கச்சிதமாக அரங்கேற்றத் தொடங்கியிருந்தார்.

டில்லிக்கு தந்தி அனுப்புதல், ஆர்ப்பாட்டம் நிகழ்த்துதல், மனிதச் சங்கிலிப் பேரணிகளை முன்னெடுத்தல் என்று நீண்டு விரிந்து செல்லத் தொடங்கிய கருணாநிதியின் போர்நிறுத்த நாடகம், ஒக்ரோபர் மாதம் 14ஆம் நாளன்று இந்திய மத்திய அரசுக்கு காலக்கெடு விதிக்கும் காட்சியாகக் கட்டவிழத் தொடங்கியது. இதன்படி பதினான்கு நாட்களில் ஈழத்தில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகம்-புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூண்டோடு பதவி விலகுவார்கள் என்று கருணாநிதி அறிவித்திருந்தார்.

இதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வகையில் கருணாநிதியின் கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பும், ஜெயலலிதாவின் தன்னாட்சியுரிமை அறிக்கையும் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் தொடர்பான ஓரளவு நம்பிக்கையை வன்னி மக்களிடையே ஏற்படுத்தியிருந்தன. தமிழகத்தின் கட்சி அரசியலில் எந்தவொரு காலகட்டத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலையிடாத பொழுதும்கூட, ஈழத்தமிழர்களின் நலன்களில் ஒத்திசைவான சமிக்ஞைகளை ஏககாலத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் வெளியிட்டமை, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரை ஒரு ஆரோக்கியமான விடயமாகவே பார்க்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்விதமான தொடர்புகளையும் தாம் பேணுவதில்லை என்ற தோற்றப்பாட்டை கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும், ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஊடகங்களில் காண்பித்து வந்த பொழுதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் காலம்காலமாக உறுதுணையாக நிற்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஊடாக, பின்கதவுத் தொடர்புகளை இவர்கள் பேணியே வந்திருந்தனர்.

இந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பின்கதவுத் தொடர்பாடல்களை 2006ஆம் ஆண்டிலிருந்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் போன்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஊடாகக் கருணாநிதி பேணி வந்திருந்தார். கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் தொடர்பாக ஏறத்தாள மூன்று தசாப்தகாலப் பட்டறிவைக் கொண்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். 1980களில் எம்.ஜி.ஆர் அவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய ஒரேயொரு காரணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விரோதமான போக்கைக் கையாண்டவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் கருணாநிதியுடனும் நல்லுறவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பேணிய பொழுதும்கூட, விடுதலைப் புலிகளின் விடயத்தில் காழ்ப்புணர்ச்சியுடனேயே கருணாநிதி நடந்துகொண்டார். தனது புலிவிரோதப் போக்கின் உச்சகட்டமாக 1994ஆம் ஆண்டு மே மாதம் வைகோ அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றிய கருணாநிதி, வைகோவைப் பயன்படுத்தித் தன்னைப் படுகொலை செய்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முற்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யையும் அவிழ்த்து விட்டிருந்தார்.

இவ்வாறாக கருணாநிதியின் புலிவிரோதப் போக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் நன்கு அறிந்திருந்த பொழுதும்கூட, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில் அவருடன் நல்லுறவைப் பேணுவதற்கே தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியிருந்தார்கள். இந்த வகையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் அறிக்கைகளை 2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கருணாநிதி வெளியிடத் தொடங்கிய பொழுது, அவருக்கு தமது நேசக்கரத்தை நீட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழத்தமிழர்களின் துயர்துடைப்பதில் அவரால் ஆற்றக்கூடிய பணிகளையிட்டு நம்பிக்கை வெளியிட்டிருந்தார்கள். இதன் ஓர் அங்கமாக ஒக்ரோபர் மாதம் 14ஆம் நாள் காலையில் கருணாநிதிக்கான அந்தரங்க மடல் ஒன்றை, நேரடியாக அவரது மின்னஞ்சல் முகவரிக்கும், சுப.வீரபாண்டியன் ஊடாகவும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் அனுப்பி வைத்திருந்தார். அந்த மின்மடல் பின்வருமாறு அமைந்திருந்தது:

“மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி
முதலமைச்சர்,
தமிழ்நாடு,
இந்தியா.

அன்புடன் அண்ணா,
ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு துயர் துடைக்க உங்களால் உங்கள் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் அனைத்துக்கட்சி மாநாடு சிறப்புடன் நடைபெற என்வாழ்;த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இம்மாநாடு தொடர் நடவடிக்கைகளின் ஊடாக ஈழத்தமிழ் மக்களின் சுபீட்சமான சுதந்திரமான வாழ்விற்கு வழிசமைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பா. நடேசன்,
பொறுப்பாளர்,
அரசியற்துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்.”

எனினும் இதற்கான பதில் எதனையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி அனுப்பி வைக்கவில்லை. இருந்த பொழுதும், மறுநாள் 15ஆம் நாளன்று ஈழத்தமிழர்களுக்காக தனது நாடாளுமன்றப் பதவியைத் துறப்பதற்கு தயாராக இருப்பதாகக் கூறி தனது தந்தையிடம் கடிதம் ஒன்றை கனிமொழி கையளித்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) உறுப்பினராக அங்கம் வகித்து வந்த கனிமொழியால் கையளிக்கப்பட்ட இந்தக் கடிதம் ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டதோடு, கனிமொழியின் தமிழினப் பற்றுத் தொடர்பாக ஈழத்தமிழர்களிடையே நம்பிக்கையையும் தோற்றுவித்திருந்தது.

ஒரு கவிஞராகவும், கருணாநிதியின் இலக்கிய வாரிசாகவும் ஈழத்தமிழர்களால் அறியப்பட்ட கனிமொழியின் பதவி விலகல் அறிவிப்பு கருணாநிதி மீதான ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் ஒக்ரோபர் மாதம் 16ஆம் நாளன்று, நேரடியாகவும், சுப.வீரபாண்டியன் ஊடாகவும் கனிமொழிக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் அந்தரங்க வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்தச் செய்தி பின்வருமாறு அமைந்திருந்தது:

“அன்பின் சகோதரி கனிமொழிக்கு,
ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு இந்த மக்களின் துயர் துடைக்கும் நோக்குடன் உங்கள் இராஐசபா அங்கத்தினர் பதவியைத்துறந்து முன்மாதிரியாக நடந்துகொண்டமை முழுத்தமிழ் மக்களையும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தி உள்ளது. இதற்காக நான் எமது இயக்கத்தின் நன்றியினையும் மக்களின் நன்றியினையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்

பா.நடேசன்,
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.”

எனினும் இதற்குப் பின்னரான இரண்டு வார காலப்பகுதியில் கருணாநிதி பிரகடனம் செய்த கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பு செயல்வடிவம் பெறவேயில்லை. இதேபோன்று தனது தந்தையிடம் கையளித்த பதவி விலகல் கடிதத்தையும் கனிமொழி மீளப்பெற்று தனது ஆசனத்தைப் பாதுகாத்துக் கொண்டார். கருணாநிதியினதும், அவரது புதல்வி கனிமொழியினதும் ‘தமிழ்ப்பற்று’ மீது நம்பிக்கை வைத்திருந்த ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது. கருணாநிதியின் கூண்டோடு பதவி விலகும் அறிவிப்பு ஒரு நாடகம் என்பது வெட்டவெளிச்சமாகிப் போக, தமது பதவியைப் பாதுகாப்பதற்காக இந்திய மத்திய அரசின் கூட்டுச்சதிக்கு திரைமறைவில் கருணாநிதி உடந்தையாக நிற்பது பட்டவர்த்தனமாகத் தொடங்கியிருந்தது.

இருந்த பொழுதும் தமது நம்பிக்கையை ஈழத்தமிழினம் தளரவிடவில்லை. இதன் வெளிப்பாடாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, 31.10.2008 அன்று தமிழீழ தேசிய போரெழுச்சிக் குழுவின் செயலாளர் சே.முகுந்தன் அவர்களால் சுப.வீரபாண்டியன் ஊடாக கருணாநிதிக்கான மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு செவிசாய்த்து எவ்வித நடவடிக்கைகளையும் கருணாநிதி எடுக்காத நிலையில் 02.12.2008 அன்று கருணாநிதிக்கான மற்றுமொரு மனுவொன்று வன்னியிலிருந்து தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் க.ஆதித்தன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படியொன்று மீண்டும் 07.12.2008 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்களால் கருணாநிதியின் நேரடி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இருந்த பொழுதும் கருணாநிதியின் மனம் நெகிழவேயில்லை. 02.01.2009 அன்று கிளிநொச்சியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்த பொழுது தமிழகத்தில் நடைபெற்ற இலக்கிய விழா ஒன்றில் உரையாற்றிய கருணாநிதியின் புதல்வி கனிமொழி, “கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த செய்தி கிடைத்த பின்னர் இனியும் தமிழினம் பொறுமை காக்க முடியாது” என்ற தொனியில் உரையாற்றியிருந்தார். அவரது உரை இவ்வாறு அமைந்திருந்ததே தவிர அவரது செயல் சிங்கள-இந்திய கூட்டுச்சதியை ஆமோதிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக புதுடில்லியில் காங்கிரஸ் ஆட்சிபீடத்தின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையிலேயே கருணாநிதியினதும், அவரது புதல்வி கனிமொழியினதும் செய்கைகள் அமைந்திருந்தன.

2009ஆம் ஆண்டு சனவரி மாதம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் தீக்குளிப்பை தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியை நசுக்குவதிலேயே கருணாநிதி குறியாக இருந்தார்.

இதேநேரத்தில் கிளிநொச்சி வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் படை வலிமை தொடர்பான ஐயம் வல்லாதிக்க சக்திகளிடையே வலுவடைந்திருந்தது. யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று அதுவரை கருத்து வெளியிட்டு வந்த வல்லாதிக்க சக்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்திப் பகிரங்கமாக அறிக்கை வெளியிடத் தொடங்கியிருந்தன.

கே.பி-உருத்திரகுமாரன் தரப்பினரின் ஆமோதிப்புடன் 2009 பெப்ரவரி மாதத்தின் முதல் நாட்களில் வல்லாதிக்க சக்திகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு-சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முக்கர்ஜீ ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் பா.சிதம்பரம் வலியுறுத்த, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடுக்கி விடப்படுவதை பிரணாப் முக்கர்ஜீ வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு எவ்விதமான ஆட்சேபனையையும் வெளியிடாது ஊடகங்களில் அமைதி காத்த கருணாநிதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்தி தனது பின்கதவுத் தொடர்புகள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு செய்திகளை அனுப்பியிருந்தார். இம்முறை கருணாநிதியினதும், பா.சிதம்பரத்தினதும் பின்கதவுத் தொடர்பாளர் வகிபாகத்தை வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் பணிப்பாளர் ஜெகத் கஸ்பார் அடிகளார் வகித்திருந்தார். இது தொடர்பாக 12.02.2009 அன்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான செய்தி ஒன்று ஜெகத் கஸ்பார் அடிகளாரால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய நேரம் 4:45 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அரசின் அதிகாரபூர்வ செய்தி கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்துமாறு கோரி அன்று மாலை பா.நடேசன் அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஜெகத் கஸ்பார் அனுப்பிய மின்மடல் பின்வருமாறு அமைந்திருந்தது:

“அன்புள்ள திரு.நடேசன்,
தொடர்பு விபரங்களை உள்ளடக்கிய மடல் எமது நேரம் பி.ப 4:45 இற்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தயவு செய்து உறுதிப்படுத்தவும்.

ஜெகத்”

எனினும் இதன் பின்னரான நாட்களில் இந்திய அரசின் ஆயுதக் களைவு-சரணடைவு திட்டத்திற்கான தமது ஆட்சேபனையை மிகவும் பண்பாகவும், இராஜதந்திரிமான முறையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள். அதேநேரத்தில் வன்னி கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் பரப்பளவு சுருங்கத் தொடங்க, சிங்களப் படைகளின் அரக்கத்தனமான தாக்குதல்களில் படுகொலை செய்யப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்கு கௌரவமான போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிடவில்லை. இதனைத் தொடர்ந்து தன்னுடன் நேரடித் தொடர்புகளை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பேணுவதற்கு ஏதுவாக, 02.03.2009 அன்று மின்னஞ்சல் ஒன்றை கனிமொழி அனுப்பியிருந்தார். ஏக காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவையும், சரணாகதியையும் வலியுறுத்தும் அழுத்தங்கள் தனது பின்கதவுத் தொடர்புகள் ஊடாக கருணாநிதியால் பிரயோகிக்கப்பட்டன.

இந்நிலையில் ஆனந்தபுரம் சமர் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் 29.03.2009 அன்று காலையும், மதியமும் கனிமொழிக்கும், கருணாநிதிக்கும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரால் அவசர செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தம்மால் வாசிக்க முடியவில்லை என்று கனிமொழி பதிலளித்ததை அடுத்து மீண்டும் அதே செய்தியை மறுநாள் 30.03.2009 அன்று காலை கனிமொழிக்கு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அனுப்பி வைத்தார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“அன்புடன் சகோதரி கனிமொழிக்கு,
தற்போது இங்கு தினமும் நூற்றுக்கணக்கானக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் கொண்டிருக்கின்றனர். நாம் நீண்டகாலமாகவே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றோம். எமது அவலங்களை போக்குவதற்காகவே நாம் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் சிங்கள அரசு யுத்தத்தை தொடர்ச்சியாக நடாத்திவருகின்றது. சிங்கள அரசின் அதிமுக்கிய மூத்த அமைச்சர்கள் இந்திய அரசின் உதவியினாலேயே தாம் இந்த யுத்தத்தை வென்றுகொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்த வண்ணம் உள்ளனர். இது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. இந்த நேரத்திலாவது நீங்களும் அப்பாவும் சேர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி யுத்த நிறுத்தத்தை கொண்டுவந்தால் எமது மக்களை காப்பாற்றலாம். நிபந்தனையற்ற யுத்தநிறுத்தமே எதிர்காலத்தில் அரசியல் பேச்சுவார்த்தைக்கும் நிரந்தர சமாதானத்திற்கும் வழிவகுக்கும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன்.

நன்றி,

என்றும் உங்கள் அன்பான,
சகோதரன் பா.நடேசன்”

மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பா.நடேசன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த செய்திக்கு கருணாநிதியோ, அன்றி கனிமொழியோ உடனடியாக எந்தவொரு பதிலையும் அனுப்பவில்லை. ஆனந்தபுரம் முற்றுகையில் தமிழீழ தேசியத் தலைவர் சிக்கியிருப்பதாக இந்திய அரசுக்கு சிங்கள அரசு செய்தியொன்றை அனுப்பியிருந்த நிலையில், பா.நடேசனின் கடிதத்திற்கு பதிலளிக்காது கனிமொழியும், கருணாநிதியும் அமைதி காத்தனர்.

இந்நிலையில் வீரத்தளபதிகளான பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா போன்றோரும், நூற்றுக்கணக்கான போராளிகளும் தமது உயிரை வேலியாக்கி நிகழ்த்திய எதிர்த்தாக்குதல்களில் சிங்களப் படைகளின் ஆனந்தபுரம் பெட்டி முற்றுகை உடைக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் நகர்த்தப்பட்டார். தமிழீழ தேசியத் தலைவரை உயிருடன் சிறைப்பிடிப்பதற்கு சிங்கள-இந்திய அரசுகள் எடுத்த முயற்சி மாவீரர்களின் வீரம்செறிந்த தாக்குதல்களாலும், தற்கொடையாலும் சிதறடிக்கப்பட்டது.

05.04.2009 அன்று ஆனந்தபுரம் பகுதியை சிங்களப் படைகள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து மறுநாள் 06.04.2009 நாளன்று புலம்பெயர் தேசங்கள் தோறும் கிளர்ந்தெழுந்த ஈழத்தமிழர்கள் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். இந்நிலையில், சிங்கள-இந்திய அரசுகளின் கனவு பலிக்காத சூழலில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் 07.04.2009 அன்று முற்பகல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கான பதிலை கருணாநிதியின் புதல்வி கனிமொழி அனுப்பியிருந்தார். ஆங்கிலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் தமிழ்வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது:

“நடேசன் அண்ணன்,
நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை நான் அறிவேன். நீங்கள் அனுப்பிய மடல் தொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லோருடனும் பேசிவிட்டேன். குடியரசுத் தலைவரின் உரையில் தெரிவிக்கப்பட்டமை போன்று ஆயுதங்களை கீழே போடுவதற்கான ஒப்புதலை நீங்கள் வெளியிட வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தயவு செய்து அதைச் செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவு செய்யக்கூடும் போல் தோன்றுகின்றது. நான் சொல்வதை செய்ய முடியாதுவிட்டால் தயவு செய்து டில்லியுடனேயே கதையுங்கள். மக்களைப் பற்றி உள்துறை அமைச்சரும் கரிசனையாக உள்ளார். கிடைக்கும் செய்திகள் கவலையளிக்கும் வகையிலும், தீர்க்கமானவையாகவும் உள்ளன. தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து தவறான வழிகாட்டல்களை பின்பற்றாதீர்கள்.

கனிமொழி.”

எனினும் கனிமொழியின் இந்த மடலுக்கான தமது ஆட்சேபனை கருணாநிதியின் பின்கதவுத் தொடர்புகள் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அன்று பிற்பகல் மீண்டுமொரு தடவை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை வலியுறுத்தி கனிமொழியால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு பிறிதொரு மடல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த மடலின் தமிழ்வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது.

“நடேசன் அண்ணன்,
அங்குள்ள நிலமைகள் தொடர்பாக நாங்கள் எல்லோரும் கவலையடைந்துள்ளோம். சிறீலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்வரும் பட்சத்தில் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தயாராக இருப்பதாக அறிவிப்பதைபற்றி சிந்தியுங்கள். உள்துறை அமைச்சரும், முதலமைச்சரும் அங்குள்ள மக்கள் தொடர்பாக மிகவும் அக்கறையாக உள்ளார்கள்.
நான் சொல்வதை செய்ய முடியாவிட்டால், தயவு செய்து டில்லியில் உள்ள ஆட்களுடன் கதைக்கவும்.

கனிமொழி.”

ஒருபுறம் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருதில் கருணாநிதி குறியாக இருந்ததை அவரது புதல்வியின் மடல் வெளிப்படுத்தியதோடு, முத்தமிழ் அறிஞரின் வாரிசு என்று பெயர்போன அவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்கள் இன்னொரு செய்தியையும் உணர்த்தியிருந்தது. அதாவது தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளருக்கு கனிமொழி அனுப்பிய இரண்டு கடிதங்களின் படிகள், இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டமையே அந்த செய்தியாகும்.

இவ்வாறாக வன்னிப் போரின் உச்சகட்டத்தில் கருணாநிதியின் மறுமுகம் தமிழீழ விடுதலைப் புலிகளிடையே எவ்விதமான ஐயம்திரிபு இன்றி பட்டவர்த்தனமாகியிருந்தது. தனது புலிவிரோதப் போக்கின் உச்சகட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளை சரணடைய வைத்து அழிப்பதில் குறியாக இருந்த கருணாநிதி, அதற்காக ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களின் உயிர்களை சிங்களம் காவுகொள்வதையிட்டு எவ்வித கவலையும் கொள்ளவில்லை.

26.04.2009 அன்று ஒருதலைப்பட்சமான முறையில் போர்நிறுத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்த பொழுதும்கூட, இதுவிடயத்தில் சிங்கள அரசைப் போர்நிறுத்தம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகள் எவற்றிலும் இந்திய அரசு ஈடுபடவேயில்லை. இதற்கான அழுத்தங்கள் எதனையும் கருணாநிதியும் பிரயோகிக்கவில்லை.

அதேநேரத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கத் தொடங்க, தமிழகத்தில் மீண்டும் தளிர்விட்ட மக்களின் கொந்தளிப்பை தணிக்கும் நோக்கத்துடன் மறுநாள் 27.04.2009 அன்று சென்னையில் கருணாநிதியால் உண்ணாநோன்பு நாடகம் அரங்கேற்றப்பட்டது. காலையில் உண்ணாநோன்பை தொடங்கிய கருணாநிதி, தனது முயற்சியால் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அன்று மதியத்திற்குள் பழரசம் அருந்தித் தனது உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார். ஆனால் அதே நாளில் வன்னியில் நூற்றுக்கணக்கான தமிழ் உயிர்களை சிங்களம் நரபலி வேட்டையாடியது. கருணாநிதியை நம்பியிருந்த வன்னி மக்களுக்கு சாவையே பரிசாக கருணாநிதி வழங்கினார். கருணாநிதியின் கலைத்திறனை வெளிப்படுத்துவதற்கு ஈழத்தமிழினமே பலிக்கடா ஆக்கப்பட்டது.

இது பற்றி தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுக்கு எழுதப்பட்ட மின்மடலில் தமிழகத்தில் இருந்து வெளிவரும் தினமணி பத்திரிகையை சேர்ந்த வி.தேவதாசன் என்ற ஊடகவியலாளர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

“தோழர் நடேசன் அவர்களுக்கு, வணக்கம்
சென்னையிலிருந்து தினமணி செய்தியாளர் தேவதாசன் எழுதுவது. போரை நிறுத்த இலங்கை அரசின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என கூறி, சென்னையில் தனது உண்ணாவிரதத்தை 6 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் கருணாநிதி முடித்துக் கொண்டுள்ளார். கருணாநிதி கூறுவது உண்மையா? தயவுசெய்து உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள்.

அன்புடன்
வி.தேவதாசன்.”

தனது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக கருணாநிதி ஆடிய உண்ணாநோன்பு நாடகத்தின் உண்மைத்தன்மையை தமிழக மக்களில் ஒருதரப்பினர் நன்கு புரிந்து கொண்டிருந்ததையே தினமணி செய்தியாளரின் கடிதம் வெளிப்படுத்தியிருந்தது.

“தமிழினத்தின் காவலன், உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன், முத்தமிழ் வித்தகர்!” என்றெல்லாம் முகமகன் கூறப்படும் தந்திரி கருணாநிதியின் மறுமுகத்தை உலகத் தமிழனம் புரிந்து கொள்வதற்கு சிறிதளவாவது இக்கட்டுரை உதவிபுரிந்திருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

கருணாநிதியைப் போன்று தமிழீழ தேசத்திற்கு துரோகமிழைத்த தந்திரிகளின் மறுமுகம் இனிவரும் தொடர் கட்டுரைகளில் அவர்கள் எழுதிய கடிதங்களுடன் ஆதாரபூர்வமாக வெளிக்கொணரப்படும்!

நன்றி: ஈழமுரசு (08.04.2011

நன்றி பதிவு இணைய தளம்.

Saturday, March 26, 2011

மறக்க முடியுமா..

கருணாநிதியின் ஊழல்கள் குறித்த புத்தகம்


ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011 00:07


தற்போது நடந்து வரும் ஆட்சியில் கருணாநிதியின் ஊழல்கள் குறித்த புத்தகம் ஒன்று பத்திரிக்கையாளர் அன்பு அவர்களால் எழுதப் பட்டு இன்று வெளியிடப் பட்டது. இந்தப் புத்தகத்தை சுப்ரமணிய சுவாமி இன்று சென்னையில் வெளியிட்டார். கடந்த ஐந்தாண்டுகளாக நடந்த ஊழல்களின் பட்டியல் மிக மிகப் பெரியது என்றாலும், ஆவணப்படுத்தப் பட்ட ஊழல்களில் ஒரு பத்து சதவிகிதத்தை மட்டும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் அன்பு.

P32601001

இந்தப் புத்தகம், கடந்த ஐந்தாண்டுகளாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, பல்வேறு ஆவணங்களை சேர்த்தும், வேறு பல இடங்களில் இருந்து சேகரித்தும் எடுக்கப் பட்ட ஆவணங்களில் இருந்து, இந்த அரசில் மிக மிக திறமையாக நடத்தப் பட்டிருக்கும் ஊழல்களை பட்டியலிடுகிறது. இந்த புத்தகத்தை, சவுக்கு தனது வாசகர்களுக்காக, பிரத்யேகமாக, வழங்க இருக்கிறது. இப்போது, நூல் ஆசிரியரின் முன்னுரையைப் பார்ப்போம்.

1-24_Page_01

1-24_Page_03

25-52_Page_26


Wednesday, March 23, 2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன? - தமிழ் முருகேசன், 23.03.2011.

2011 தேர்தல் திருவிழா துவங்கிவிட்டது. வழக்கம்போல் இலவசத்திட்டங்களும் தேர்தல் அறிக்கைகளாக வெளியிடப்படுவதும் ஆரம்பமாகிவிட்டன. வாக்குக்குப் பணம் கொடுப்பது எப்படி என ஒரு சில கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் அமைப்புகள் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற நிலையை எடுத்துள்ளன. ஆனால் இத்தகைய அமைப்புகள் மீண்டும் ஒருமுறை தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது ஒருபுறம் வியப்பாகவும் மறுபுறம் வேதனையாகவும் உள்ளது.
காங்கிரசை ஒழித்தால் மட்டும் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுமா? காங்கிரசை ஆரம்பநிலையிலிருந்து இங்கு வளர்த்து விட்டவர்கள் திராவிட இயக்கத்தினர்தான். பெரியார் என அழைக்கப்பட்ட ஈ..வே.ராமசாமி நாயக்கர் அவர்களே பச்சைத்தமிழர் என காமராசரை ஆதரித்து காங்கிரசின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார். அண்ணாவை எதிர்ப்பதற்கு காமராசரை ஆதரிப்பது என இப்போதுள்ள வீரமணியின் குருநாதராக பெரியார் செயல்பட்டார்.
1965 இந்தி எதிர்ப்புப்போரில் ஏறத்தாழ நானூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணமாக இருந்தவர் அப்போதைய தமிழக காங்கிரஸ் முதல்வரான பக்தவச்சலம். அவருக்கு மணிமண்டபம் கட்டி அழகு பார்த்தவர் தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதி. 1970 களிலேயே தமிழனின் இரத்தம் காய்வதற்கு முன்பே, நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக என முழங்கியவர் தான் திராவிடப் பேரியக்கதின் குலக்கொழுந்து! மீண்டும் 1980 தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு வைத்து காங்கிரசிற்கு வாய்ப்புகளை வழங்கி அதற்கு உயிரூட்டியவர் தான் வாழும் பெரியார்.
ஈழத்தில் நாள்தோறும் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபொழுது, சிக்கலில் இருந்து தப்பிப்பதற்காக மருத்துவமனையில் முடங்கிய இராசராச சோழன். முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குக் காரணமான சோனியாவை சொக்கத்தங்கம் என்றழைத்த வாழும் வள்ளலார். இந்தியாவைக் கொள்ளையிட்டு தனது சொந்த கசானாவை பெருக்கியும், கேட்டால் ஆ.இராசா தலித் அதனால்தான் எல்லோரும் பாய்கிறார்கள் என விளக்கம் கொடுக்கிறார். தலித் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?. தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு அதிக அளவில் தொகுதிகளைக் கொடுத்து இல்லாத காங்கிரசுக்கு பாலும் முட்டையும் கொடுத்து வளர்த்துவிட்டவர்தான் வாழும் அம்பேத்கர்.
இந்நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசை மட்டும் எதிர்ப்பது என்பது சப்பைக்கட்டு கட்டுவது போன்றதுதான். நச்சுப்பாம்பிற்கு பால் வார்ப்பவர்களை தடுத்தால்போதும் அது தமிழ்மண்ணிலிருந்து அழிக்கப்படும். தி.மு.க.வை தோற்கடிப்பதன் மூலமே காங்கிரசை முடக்கமுடியும். நாம் எப்படி ஜெயலலிதாவை ஆதரிக்க முடியும்?- என கேட்கப்படுகின்றது- இதற்கான விடை, திராவிட இயக்கங்கள் அல்லாத தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒன்றிணைத்த மூன்றாவது அணிதான் சிறந்தது. ஆனால் அதற்கான காலம் கனியாத பொழுது இப்பொழுது அ.தி.மு.க. கூட்டணியை வெற்றியடையச்ª செய்வதுதான் ஒரே தீர்வு...
தே.மு.தி.க.வும், ம.தி.மு.க.வும் மூன்றாவது அணிக்குப் பொருத்தமாவையல்ல. இதுவும் வேறொரு திராவிட சாக்கடைதான். நாட்டைக் கொள்ளையடிப்பதில், பொய்யும் புரட்டும் பேசுவதில் பார்ப்பனர்களை மிஞ்சியவர்கள்தான் இந்த திராவிடப் பொய்யர்கள். ஆகவே, நமக்குள் சந்தேகங்கள் வேண்டாம்..... எதிரியோடு: பேச்சுவார்த்தையாவது நடத்தலாம்.... துரோகியோடு பேச்சுவார்த்தை நடத்த முடியுமா?
இல்லாத ஆரிய மா¬யையைக் காட்டி, இருக்கிற தமிழ்த் தேசியத்தை மறைத்து, இல்லாத திராவிடம் பேசி ஏமாற்றியவர்களை முதலில் வீட்டிற்கு அனுப்புவோம். அடுத்த 2016 தேர்தலில் அ.தி.மு.க.வையும் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து ஒழித்துக்கட்டுவதாகத்தான் நமது திட்டம் இருக்க வேண்டும்.

Tuesday, March 22, 2011

ஜப்பான் ஆழி பேரலையில் மரணமடைந்த ஜப்பானியர் மரணத்தை தமிழர்களாய் மகிழ்வோடு கொண்டாடுவோம்.

செவ்வாய், 15 மார்ச், 2011



மலேசியாவில் சயாம் ரயில் பாதை போட ஒரு லட்சத்து அய்ம்பதயிரம் தமிழர்கள் ஜப்பானியரின் நேரிடையான படுகொலை .முள்ளிவாய்கால் படுகொலையில் மறைமுகமான ஜப்பான் பங்கு இனி மேல் மனிதாபிமானம் நமக்கு தேவை இல்லை.இன படுகொலை இறந்து போன நமது உறவுகளை நம் உயிர் உள்ள வரை நினைவு கூர்வோம.நமது அடுத்த தலைமுறை விடுதலை காற்றை சுவாசிக்க உணர்வோடு போராடுவோம் தமிழ்நாட்டு விடுதலைக்கான பாதையை கண்டு பயணப் படுவோம் . அதுவே ஈழ விடுதலைக்கு உண்மையான ஆதரவாக அமையும்.குரல் வழி அதரவு காற்றில் விழும் சருகின் பயன் மட்டுமே.நமது விடுதலைக்கான பேரோலம் இந்திய நாய்களின் செவிட்டில் அறையட்டும்.ஈழத்துக்கு அதரவு அடிமையின் அதரவு அல்ல விடுதலை நாட்டின் அங்கீகாரம்.விடுதலையை அவர்கள் பெற்று விட்டார்கள் .நாட்டுக்கான கருத்து அவர்களுக்கு உருவாகி விட்டது.நாம் இன்னும் இந்திய அடிமைகள் !

Tuesday, March 15, 2011

போரின் குழந்தைகள்





ஒரு தடியையோ சில கட்டைத் துண்டுகளையோ இந்தக் குழந்தைகள்
எடுத்துச் செல்கின்றனர்
சிறிய குழிகளையோ சிறிய பற்றைகளையோ
அவர்கள் தேடிச்செல்கிறார்கள்
மிக நீளமான தூரத்திற்கு
அவர்கள் எறியும் கற்கள் சென்று விழுகின்றன
இரத்தம் வடிந்து கொண்டிருப்பதற்கு குங்குமத்தை அல்லது
கடதாசிப் பூக்களை கரைத்து அப்பிக் கொண்டு
பழைய சீலைத்துணிகளை கட்டிக் கிடக்கிறார்கள்.

வயற்கரை தென்னைமரங்களில்
மீண்டும் இளநீர்கள் காய்த்திருக்கின்றன
பெயர்த்து துரத்தப்பட்ட சனங்கள் குடியிருந்த
தொகுதிக்கு யாரும் திரும்பவில்லை.
லூர்த்தம்மாவும் அபிராஜிம்
சைக்கிளை எடுத்துக் கொண்டு எல்லாத் தெருக்களுக்கும் செல்கின்றனர்
கோணாவில் குளத்தில் தாமரைகள் பூத்திருக்கின்றன.

லூர்த்தம்மாவின் கண்கள் சிவக்கின்றன
அபிராஜின் கைகள் காய்த்துப் போயிருக்கின்றன.

ஒளிந்து விளையாட அவர்கள் நினைக்கும்பொழுது
பதுங்குகுழிகள் மிக அருகில் இருக்கின்றன
கூடாரங்களோ குழந்தைகளின் வார்த்தைகளை
தாங்கமுடியாதசைகின்றன
கூடாரங்களை சிலவேளை குழந்தைகள் கழற்றி விடுகின்றனர்.

மீண்டும் வயல்களுக்குள் இறங்குபவர்களையும்
லூர்த்தம்மா பார்த்துச் செல்கிறாள்.
சின்னக்கோயிலில் தீபம் வைக்கும் அபிராஜின்
கண்களில் பனித்த இரவுகளின்
சித்திரவதைகள் எரிந்து கொண்டிருந்தன
லூர்த்தமாவின் கைகளில் கொடுக்கப்பட்ட
துப்பாக்கிகளை பறித்து விட்டனர்
அபிராஜிடமிருந்த குண்டுகளை பறித்து விட்டனர்.

தோட்டக்களை எண்ணி கணக்கு பார்க்கவும்
குண்டுகளை அடையாளம் காட்டவும்
வெற்று செல்பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கவும்
மிதிவெடிகளை தூக்கிச்சென்று பின்வளவுகளில் போடவும்
இந்தக் குழந்தைகள் பழகியிருக்கின்றனர்
சிங்களப் பெயர்பலகைகளால் எச்சரித்திருக்கும்
சில வீதிகளுக்கு செல்லாதிருக்கவும்
உயரமான வேலிகளால் மூடப்பட்ட வீடுகளுக்கு தூரமாகச் செல்லவும்
அறிவுருத்தப்பட்டிருக்கின்றனர்
அரிக்கன் லாம்புகளை குழந்தைகள் தூண்டி விட்டு
குப்பி விளக்குகளை கைகளில் தூக்கிச் செல்லுகிறார்கள்.

லூர்த்தம்மா இழுத்துச் செல்லப்பட்ட தெருக்களில் இப்பொழுது
மிதிவெடிகள் பதுங்கியிருக்கின்றன
அபிராஜ் ஒளிந்திருந்த காணிகளுக்குள் பிரவேசிக்க முடியாதபடி
அபாய வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன
லூர்த்தம்மாவையும் அபிராஜியையும்
இழுத்துச் சென்றவர்கள் மீண்டும் தெருக்களில் திரிய
கையசைத்து
வரிசையாய் சென்றவர்களது உடல் நிலம் அழிக்கப்பட்டிருக்கிறது

சனங்களின் குருதியால் சிவந்த நிலத்தில்
குழந்தைகளுக்காக
எஞ்சிய வெடி பொருட்களின் பாகங்களைத் தவிர ஒன்றுமில்லை
எல்லாவற்றின் முன்பாகவும் குழந்தைகள் செல்லுகின்றனர்.


தீபச்செல்வன்

உள் நுழைய அஞ்சும் நகரின் தெருக்கள்


0 தீபச்செல்வன் ----------------------------------------
01.
யாரும் உள் நுழைய அஞ்சும் தெருக்கள்
எங்கள் நகரில் அதிகம் உள்ளன.
பிரமாண்டமான நிகழ்வென்றில்தான்
நகரத்திற்கு செல்லும் அவசியமான தெருவில்
மறித்துக் கட்டப்பட்டிருந்த
இராணுவச் சங்கிலிகள் கழற்றப்பட்டன.

எப்பொழுதோ சனங்கள் வாழ்ந்ததிற்கான அடையாளங்களை
இன்னும் தன்னில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது
நகரின் உட்புறமாய் சிதைவடைந்திருக்கிற தெரு.

இந்தத் தெரு நான் பிறந்த காலம் முதல்
இன்று வரை முடப்பட்டிருந்தது
நான் எனது காலங்களையும் இழந்ததைப்போல
இந்தத் தெருவையும் இழந்திருக்கிறேன்.

தடைபோடப்பட்ட இந்தத் தெருவிலும்
நான் குழந்தைகளை தேடுகிறேன்
குழந்தைகள் வாசித்து பயப்பிடும் கதைகளை எல்லாம்
இந்தத் தெருவின் சுவர்களின் நான் வாசிக்கிறேன்.

இன்னும் மூடப்பட்டிருக்கிற நிலங்களுக்குச் செல்லும்
காலங்களுக்காக உயிரை பிடித்து
வைத்திருக்கும் வயது முதிர்ந்த என் தந்தையின் தாயிற்கு
நான் என்ன சொல்ல.
புற்கள் வளர்ந்து முடிப்போயிருக்கும்
அவரின் கனவு நிரம்பிய
வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் இலட்சியத்தை
நீ எப்படி புரிந்து வைத்திருக்கிறாய்.
ஒரு பைத்தியக்கார கிழவியாய் மரித்துவிட்டுப்போ
என யாரோ சொல்லுவதாய்
அவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்
அவர் அலையத் தொடங்கியது எப்பொழுது?

காயங்களுடன் உள்ள நகரின் உள் பக்கத்தில்
இன்று அனுமதிக்கப்பட்ட தெருவில்
சென்று கொண்டிருக்கிறேன்
வெடியேந்தி கடலின் ஆழத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்
பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்ட
படகு ஒன்று தரித்து நிற்கிறது.
கடலில் கரைந்து போன அவளது சொற்களையும்
அதற்கிடையிலிருந்த ககைளையும் நான் வாசித்தேன்.
யாரும் உள் நுழைய முடியாத தெருக்கள்
எங்கள் நகரல் அதிகம் உள்ளன.
சிதைந்த நகரம் மபெரும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துக் கொண்டிருக்கிறது


02
தெருக்களில் செல்ல அஞ்சுகின்றன குழந்தைகள்
திறபடாத தெருக்களை குறித்து
என் குழந்தைகள் எல்லாவற்றையும்
அறிந்து வைத்திருக்கிறார்கள்
ஒரு இராணுவ வாகனமும் அதன் சத்தங்களும் என்று
அதிகாரம் எப்பொழுதும்
பயணம் செய்துகொண்டிருக்கிற வழிகளில்
இந்தக் குழந்தைகள் பாடசாலை செல்ல அஞ்சுகின்றனர்.

எங்கள் நகரின் எந்தத் தெருவும் மிக நீளமாக செல்லுவதில்லை
அது ஆபத்தான முட்கம்பிகளில் முடிந்து போகலாம்
அனுமதிக்கப்படாத அறிவிப்பு பொருத்தப்பட்ட
வேலியில் நம்மை மோத வைக்கலாம்
முடிவில்
தண்டனைகளுக்கான முறைகளை அது சொல்லியபடியிருக்கும்.

நாங்கள் ஆண்டுக்கணக்கில் காணாதிருந்த
தெருவை ஒரு நாள் திறந்து விட்டார்கள்.
பசியின் குரூரம் உறைந்த நாட்களின்
தெருவுக்கான தவத்தை முடித்துக் கொண்டு
வீதியப் பார்க்கிறோம்.
சிதைவுகளைத் தவிர ஒன்றையும் எங்கள் தெருவில் விட்டுவைக்கவில்லை
அழிவினால் மாற்றங்களுக்குள்ளான
இந்தத் தெருவுக்குள் நுழைய நாம் அஞ்சுகிறோம்.
எல்லா அநியாயங்களையும்
மென்முறையிலான ஆக்கிரமிப்புக்களையும்
எதிர்ப்பதற்கு திரணியற்ற அவற்றை நிறுத்துவதற்கு வழியற்ற
ஆக்கிரமிப்பினால் அதன் அதிகாரத்தினால்
மூடுண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்
கிழவியின் உயிர் தனக்குள் சொல்லிக் கொள்கிறது
தெருவின் கதைகளை.


03
தெருக்களில் வடிந்த குருதி காய்ந்து
படிந்து போயிருக்கிறது
தெருக்களில் கொல்லப்பட்ட உயிர்கள்
நசிந்து ஒட்டிப்போயுள்ளன
தெருக்களில் எழுதப்பட்ட கனவு வார்த்தைகள்
மிதிபட்டு உடைந்து போயுள்ளன
நீ அறிவாய் இந்த தெருவில் நடப்பதற்காய்
நாம் இழந்தவைகளின் உறைந்து போன கதைகளை.

இந்தக் குழந்தைகள் உலவ தெருக்களை அனுமதியுங்கள்
திறக்கப்பட்ட தெருக்களை குறித்து நாம் கைகள் தட்டுகிறோம்
மூடப்பட்ட தெருக்களை திறந்து விடுங்கள்
தெருக்களை அள்ளிச் செல்லும் அபகரிப்பாளன்
எப்பொழுதும் திரிவதாக குழந்தைகள் பயம் கொள்ளுகின்றனர்.

இந்த நகரம் சிதைவின் பின்னர்
ஆக்கிரமிப்பாளர்களினால் கைவிடப்பட்டிருக்கிறது
நகரத்தை ஆக்கிரமிப்பவர்கள்
தெருக்களை ஆக்கிரமிப்பவர்கள் அவற்றை
தமது அரண்களாக்கி எம்மிடமிருந்து பறித்து விடுகின்றனர்
அல்லது சிதைத்து கைவிடுகின்றனர்.

யாரும் உள் நுழைய முடியாத தெருக்கள்
எங்கள் நகரில் அதிகம் உள்ளன.
இன்னும் உள் நுழைய அனுமதிக்கப்படாத நகரங்கள்
எங்கள் மண்ணில் அதிகம் உள்ளன.
___________________
ஏப்பிரல் 2010

புகைப்படம் - யாழ் நகரில் உள்ள மின்சார நிலைய - மனிக்கூட்டுக்கோபுர வீதி சுமார் 15 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டது

நன்றி - தீராநதி டிசம்பர்

எனது நிலத்திற்காக பிரார்த்தியுங்கள்!


0 தீபச்செல்வன் ----------------------------------------

வீழ்ந்து துயரம் விளைந்து மூடிய நிலத்தை
துண்டாக்கிச் செல்ல வரும் கைகள் விடும் கட்டளைகளால்
இன்றெமது நிலம் துடித்துக் கொண்டிருக்கிறது.

மீண்டும் ஒருமுறை பெயர்ந்து செல்லுமாறு
சனங்கள் பணிக்கப்பட்ட வேளையில்
குழந்தைகள் வெருண்டழுது
கைகளால் நிலத்தை தொடுகின்றனர்
ஆறுகள் நிலத்தை முத்தமிட்டுச் செல்லும் மழைநாளில்
ஈரமாகி செழித்த நிலம் கொதித்துக் கிடக்கிறது.

விரக்தியையும் ஏமாற்றத்தையும்
தவிர என்னிடம் எதுவுமில்லை
கொள்ளைக்காரர்கள் நம்பிக்கையை முறியடிக்கிறார்கள்
மீண்டும் மீண்டும் நிலத்தில் எத்தனை கைகள் உதைக்கின்றன?
நிலத்தை அள்ளிச் செல்ல
எத்தனை விதிகளை எழுதுகின்றன?
பிறந்து கிடந்த நிலத்தை கொள்ளையடிக்க
எத்தனை வடிவங்கள் அலைகின்றன?

வல்லமை அழிந்து கடவுள்களால் கைவிட்ட
துயரைத் தின்று களிக்கும் காலத்தில்
எனது நிலத்திற்காய் பிரார்த்திப்பாயா தோழனே!

அமைதியற்று தெருக்களில் பறிக்கப்பட்ட நிலத்தின்
பறிக்கப்பட்ட நிருபங்களுக்காக
அலையும் சனங்களிடம் இல்லை துளிர்விடும் வார்த்தைகள்
குந்தியிருக்கும் நிலங்களை தின்று
சனங்களை வதைக்கும் காலம் நம்மை அச்சுறுத்துகிறது
வாழ் நிலக் கனவின் வாக்குமூலங்களை நிராகரித்து
நிலத்துடன் கொல்லப்படுகின்றனர் சனங்கள்.

கைவிடப்பட்ட சனங்களுக்காய்
நிலத்திற்காய்
அழுதலையும் குழந்தைகளுக்காய்
குந்தியிருக்க ஒரு துண்டு நிலத்திற்காய்
பிரார்த்தனை செய் தோழி!
தாழ் நிலம் மேலுமாக தாழ்த்தப்படுகிறது
ஆறுகளுடன் மருதமரங்கள் துடித்தசைகின்றன.

தவிக்கும் தாயே உனது கண்ணீரும்
உன் பிள்ளைகளின் குருதியும்
இந்த ஆற்றில் பெருக்கெடுத்துச் செல்கிறது
தாழ் நிலக்குழந்தைகளே நாம் எங்கு செல்வது?
குருதியும் கண்ணீரும் காயாத நிலத்தை
துயர் இன்னும் ஈரமாக்குகிறது.

தெருத் தெருவாக, கிராமம் கிராமமாக
நகரம் நகரமாக
நிலத்தை அள்ளிச் செல்பவர்களின்
அகலமான கைகள் நிலமீதலைகின்றன
தயவு செய்து
எனது நிலத்திற்காக தொடர்ந்து பிரார்த்தியுங்கள்!
______________________

நம்பர் 2010

குறிப்பு :- நான் வசிக்கும் இரத்தினபுரம் தாழ்நிலப்பகுதியில் உள்ள 25 இற்கு மேற்பட்ட குடிகளை நிலத்தை விட்டு பெயர்ந்து செல்லுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரை அண்டி புறநகர்ப் பகுதியிலுள்ள இரத்தினபுரம் கிராமத்தில் வசிக்கும் இந்த மக்கள் கிளிநொச்சியினை பூர்வீகமாக் கொண்டவர்கள்.

யாழ் நிலம்

0 தீபச்செல்வன் ----------------------------------------

01
குடா நிலத்தின் யாழேசை காயமுற்றொலிக்கிறது
நிலம் அள்ள வரும் கைகள்
யாழை இழுத்து பிய்த்துடைக்கின்றன
இந்த யாழ் உடைந்து போகட்டும்!
அல்லது எரிந்து சாம்பலாகட்டும்!!
என்று அறிவிக்கப்படாத பிரகடனங்களுடன்
யார் யாரோ வந்திறங்கி
யாழெடுத்து எறிகிறார்கள்
வானத்தை பிளந்து எட்டி முகங்களை மறைக்கும்
விளம்பரப்பலகைகளின் நிழலில்
அடுக்கிவிடப்படட குளிரூட்டும் இருக்கைகளில்
அமர்ந்திருப்பவர்களின் கைகளிலுள்ள
கிண்ணங்களில் யாழின் சாம்பலிருக்கின்றன

யாழ் நகரில் வேறொரு பாடலை யாரோ ஏற்றிவிட்டு
யாழோடு நிலத்தை
யாரோ சாம்பலோடு கிண்ணகளில் போட்டுத்
தின்று கொண்டிருக்கின்றனர்
நகரெங்கும் நிலமெங்கும்
உடைந்த யாழ்கள் கால்களுக்குள் மிதிபட
யாழ்நிலத்தில்
நரம்புகள் அறுந்தெழும் துடிப்போசையை
அன்றைய மாலைநேரம் அவர்கள் தின்றாடினர்

02
தங்கள் பூர்வீக நிலங்களை அறிந்திராத
அகதிகளின் குழந்தைகள்
யாழறியாது புகையிரத வழியில் உறங்க
உச்ச பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்
வீடுகளற்று தெருக்கரையில்
தெருக் குழந்தைகளாய் காட்சியாயிருக்கிறார்கள்.

புகையிர வண்டிகள் மீண்டும் வரப்போகின்றனவா?
நுழைய அனுமதிக்கப்படாத
வலயத்திற்குள் குருதிச்சதை படிந்த சக்கரங்களுடன்
செல்லப் போகின்றனவா?
நிலத்திற்காய் அலைபவர்களை
தங்கள் வழிகளுக்காக பலியெடுக்கப் போகின்றனவா?

புகையிரத வழியிலே பிறந்த
இந்தக் குழந்தைகள் புகையிரதங்களையும் பார்த்ததில்லை
வீடுகளை அறிந்திராத
இந்தக் குழந்தைகள் ஒரு நாளும் புன்னகைத்ததில்லை
தினசரி தங்கள் பாதங்களால்
புகையிரத வழியின் பெருங்கற்களை நொருக்குகின்றனர்


03
நமது குழந்தைகளின் கைகளில் பொம்மைகள் இல்லை
பொம்மை வெளியாகிப்போன
வாழ்வில் பிறக்கும் இந்தக் குழந்தைகள்
பொம்மைகளுக்குப் பதிலாக
குப்பைபகளை அணைத்தபடி
யாழுக்குப் பதிலாக
கழிவுத் தகரங்களை வாசிக்கின்றனர்

யாரும் எழுந்திரா காலையில் குப்பைப் பைகளுடன்
கூடாரங்களுக்கு வருகின்றனர்
எல்லாத் திசைகளிலிருந்தும் வரும்
குப்பைகள் பெருகும் நகரின் ஓதுக்குப்புறங்களில்
இலையான்களுடன் பழகி
குப்பைகளை நம்பி பிறந்து
குப்பைகளுடன் வளர்கின்றனர்.

குப்பைகளில் பொறுக்கி வந்த
புத்தகப் பைகளை மைதீர்ந்த பேனாக்களை
பொம்மைகளின் தலைகளை
என்னவென்று இவர்கள் கேட்கின்றனர்?
குப்பை வாசனையடிக்கிற இந்தக் குழந்தைகள்
முத்தமிடும் பொழுது யாழ்நெஞ்சின் நரம்புகள் வெடிக்கின்றன.

04
சாம்பலை மூடிய சுவர்கள்
அதிர்வினால் உடைந்து போய் விடுமோ?
மீண்டும் மீண்டும் இந்தப் புத்தகங்கள்மீது
அவர்கள் கற்களோடு தீப்பந்தங்களை எறிய முற்படுகிறார்கள்
ஒட்டி உலர்ந்த சுவர்களில்
படிந்திருக்கிற சாம்பலை கிளற முற்படுகிறார்கள்
நமது நிலத்தைப்போல
எல்லா வகையிலும் காட்சிப் பொருளாக
புரிந்து கொள்ளாமலே இருக்கின்றன நமது புத்தகங்கள்
இந்தப் புத்தகங்களை விரிக்கும் பொழுது
சாம்பல் உதிர்ந்து கொட்டுகிறது
இவர்கள் எங்கள் சாம்பலையும் திருடிச் செல்கிறார்கள்.
தாள்கள் மாற்றப்பட்ட நமது புத்தகங்களில்
புதிய கதைகள் எழுதப்பட்டு சேகரிக்கப்படுகின்றன

இவர்களும் தீ மூட்டிய தடிகளுடன் வந்தார்கள்
சிரில் மாத்தியூவும்
காமினி திஸ்ஸநாயகேவும்
சாம்பல் வழியும் எரிந்த புத்தகங்களை தின்றுழல்வதை பார்த்தனர்
அவர்களில் இன்றைய அரசர்களின் முகங்களை கண்டனர்
வெறிவழியும் நினைவுகளுடன்
புத்தகங்களை தூக்கி எறிந்தனர்
பிள்ளைகளுடன் கொல்லப்பட்ட நூல்களுக்காகவும்
துடிக்கும் தாய்மார்களை
இவர்கள் இன்னும் புரிவதாயில்லை
சத்தமில்லாது காதோரமாய் ஒலிக்கும்
நமது நிலச் சனங்களின் கதைகளை
கிழித்தெறிய கொடுங்கைகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன
யாழ் நகரமெங்கும் அன்றைய மாலை
கிழிந்த எங்கள் புத்தகங்கள் பறந்தலைந்து கடலில் படிந்தன.

புத்தகங்களின் உயிர்கொல்ல
இன்னும் கொடும் தீப்பறவைகள் வட்டமிடுகின்றன
நமது புத்தகங்களுக்கு எதிராகவும்
இவர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள்

06
துப்பாக்கிகளாலும் அதிகாரச் சீருடைகளாலும்
நாங்கள் துரத்தபப்பட்ட பகுதியில்
யாரோ வந்தமர்கிறார்கள்
எங்களிடம் உள்ள இடர் நிரூபங்கள்
கொடுங் கைகளால் கிழித்தழிந்து போயிருக்கின்றன
கொண்டு வந்திருக்கிற குளிர்ந்த நிரூபங்கள்
இந்த நிலம் உங்களுக்குச் நமக்குச் சொந்தமில்லை என்கிறது.

தங்கள் பெரும் மலைகள் போதாது என்று
எங்கள் நிலத்தில் பங்கு கேட்டு
மண்ணுக்கடியில் இருக்கும் தொன்மைப்பொருட்களில்
புத்தரின் அரசமரக் கதைகள் எழுத முற்படுகின்றனர்.

கண் திறாதக்காது உறங்கும் புத்தரே
எங்கள் நகரமும் நாங்களும் எரியூட்டப்படுகையிலாவது
கண் திறந்திருக்கலாம்
அகலக்கால் வைத்திருக்கிற புத்தர் சிலைகள்
இராணுவ சீருடையணிந்து
கண்களை இறுக மூடியபடி நகர்கின்றன
கண்களற்ற புத்தரே
யாழெடுத்த தெருவில் எல்லாம்
உமது புதல்வர்கள் துவக்கெடுத்திருக்கின்றனர்
வாழ் நிலத்திற்காக அழும்
எங்களின் நிலத்தை துண்டாடிச் செல்லவும்
துகள்களை அள்ளித் தின்னவும்
உமது கொடும் கைகள் நீள்கின்றன


கடலே இங்கு யார் வந்திறங்கினர்?
கடல் நகரச்சனங்களின் இடிந்த வீடுகளில்
யாராலும் படிக்கப்படாத
துயர்க்காலக் கதைகள் படிந்திருக்கின்றன
அந்நிய வேரோடும் மரங்களின் விதைகளை
நமது நிலத்தில் யார் தூவினார்கள்?
நம் கடல் பெருங்காயத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
யாழின் வாய் உடைந்து வார்த்தைகளற்றிருக்கிறது
__________________
2010

எருக்கலை பூ நிலம்

எருக்கலை நிலத்தில் அலைந்து கொண்டிருக்கும்
குரல்களை நீ கேட்கிறயா?
அம்மா! என்றும் தாய் நிலமே!! என்றும்
இடிந்து மூடுண்டிருக்கும்
கல்லறைகளின் கற்குவியல்களிற்கிடையிலிருந்து எழும்
அடங்காத வார்த்தைகள் எனக்குக் கேட்கின்றன.

மாபெரும் சனங்களின் கண்ணீர் நிறைக்கப்பட்ட
விதை குழியில் இரத்தம் கசிகிறது
மரணமற்றவர்களையே நீ கொலை செய்தாய்
என்பது உனக்குத் தெரிகிறதா?
எலும்புத்துண்டுகள் மேலெழுந்து உடைந்து போயிருக்கிறது
சிதைக்கப்பட்ட எலும்புத்துண்டுகளையும்
கல்லறைத் துண்டுகளையும்
எங்களிடம் தந்து விடு
என்று தாய்மார்கள் மாரடிப்பது எனக்குக் கேட்கிறது.

எருக்கலைக் கன்றுகள் பெருகுகின்றன.

கைகளில் எந்த மரக்கன்றுகளும் இல்லை
தென்னை மரங்களோ கன்றுகளைத் தரும் நிலையில்லை
கன்றுகள் இறந்து கருகிக் கிடக்கும் நிலத்தில்
காயங்களுடன் நிற்கின்றன பெருமரங்கள்.

கல்லறைகள் பூப்பூக்கும் என்று நம்பியிருந்த தாய்மார்கள்
கல்லறைகள் உங்களால் கொல்லப்பட்டதை நம்ப மறுக்கின்றனர்
விளக்குகளால் சிவந்திருந்த நிலம்
இப்பொழுது கல்லறை உடைபட்டு கொலையுண்ட
குருதியால் சிவக்கிறது.

எருக்கலை பூக்களை சூடியபடி எனது காதலி
குழிகளில் இருந்து எழும்பி வருகிறாள்
எருக்கலை மரத்தின் வேர்களில்
சகோதரனோ முகத்தை பரவியிருக்கிறான்
குழந்தைகளோ எருக்கலை இலைகளை வாசிக்கின்றனர்
மண்ணுக்கடியில் அவர்கள் இருக்கிறார்கள் என்று
பிதட்டுகின்றன குழந்தையாகிய தாயின் வார்த்தைகள்.

இந்தப் பெருநிலம் எருக்கலைப் பூ நிலமாகிறது
நீ கேட்டாயா மண்ணுக்கடியில் திரிபவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று?
நீ பார்த்தாயா அவர்கள் என்ன கனவோடிருக்கிறார்கள் என்று?
வெட்ட வெட்ட கார்த்திகை பூக்கள் பூக்கின்றன.

உறங்காத உயிர்கள் படிய முடியாது அலைகின்றன
கொல்லப்பட்ட கல்லறைகளில் வெட்டப்பட்ட தீராக் கனவு வழிகிறது
சிதைக்கப்பட்ட துகள்களில்
ஏன் எருக்கலைகள் பூத்திருக்கின்றன?
நமது கனவைப்போல எருக்கலை செழித்தடருகிறது
__________________

புகைப்படம் : கிளிநொச்சியில் மாவீர்ர் துயிலும் இல்லம் அழிக்ப்பட்டிருக்கிறது


வைகாசி-கார்த்திகை 2010

இல்லாதவர்களின் அளவற்ற கனவு : மீள் எழுத்து

0 தீபச்செல்வன் ----------------------------------------


அவர்கள் பெருங்கனவுடனே
மரணத்தை முத்தமிட்டனர்.
கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட
கல்லறைகளும் நம்மிடம் இல்லை.
தாய்மார்கள் தீப்பந்தங்களையும்
தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர்.
மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன்
கல்லறைமீதான
தமது சொற்களையும் இழந்து விட்டனர்.

கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது.
இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை.
இலைகளில் குருதி ஒழுக
பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன.

தலைகளை மின்கம்பத்தில் மோதி
இல்லாதவர்களை அழைக்கிறது
நம்பிக்கையற்ற மனம்.
கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு
அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம்.
அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாடல்
நெருப்பில் கிடந்து பொசுங்குகிறது.
அவர்களை முழுமையாக
அழித்துவிட்டதாக இந்த நாளை
பிரகடனம் செய்கின்றனர்.

அப்பாவுக்காக தீப்பந்தம் ஏந்தி வருகிற குழந்தை
மண்ணை கிண்டி
கல்லறையை தேடிக்கொண்டிருக்கிறது.
நமது ஞாபகத்தின் கடைசி சொத்தையும்
அவர்கள் மிக வேகமாக அழித்தனர்.
அழுவதற்காக இருந்த
உரிமையையும் நாளையும் பறித்து எடுத்தனர்.
மனங்களில் கல்லறைகள்
எழும்பிக் கொண்டிருக்கின்றன.

எங்கோ ஒரு மூலையில் கனவு எரிந்து
கொட்டிக் கொண்டிருக்கிறது.
யாருமற்ற தனித்த நிலத்தில்
வரலாற்றின் துயரம் நிரம்பிய எலும்புக்கூடுகள்
எழும்பிச் செல்லுகின்றன.
மண்ணை பிரட்டி
வீரச்சொற்கள் எழுதப்பட்ட
கல்லறைகளின்
சுவர்களை ஆழத்தில் புதைக்கிறார்கள்.
கல்லறைகளின் போர் நடந்து முடிந்துவிட்டது.
சனங்களுடன் அவர்கள்
கல்லறைகளை துடைத்தெறிந்து விட்டனர்.

யாரிடமும் பூக்கள் இல்லை.
எவருக்கும் கல்லறைகள் இல்லை.
அணைக்கப்பட்ட தீப்பந்தள் அலைந்து திரிகின்றன.
வீர முகம் நிரம்பிய புகைப்படங்களும்
கரைந்து போய்விட்டன.
சனங்கள் ஏமாற்றப்பட்டனர்.
வீரர்கள் இறுதியில் தோல்வியடைந்தனர்.
இந்த நாள் தோல்வியால் நிரப்பப்பட்டிருக்கிறது.
கனவு வளர்க்கப்பட்ட பெரிய மண்ணிலிருந்து
இனம் படுகொலை செய்யப்பட்ட
சுடலையின் வாசனை திரண்டபடி பெருமெடுப்பில் வீசுகிறது.
__________________________________

இடர் நிலம்


- தீபச்செல்வன் ----------------------------------------

01
டெனிஷா என்னைப் பார்த்துக் கையசைக்காதே!
நிலத்திற்காய் தவிக்கிற உனது முகத்துயர்
கைவிடப்பட்ட சனங்களின் தோல்வியாய் வழிகிறது
நான் வெகு தூரத்திற்குச் செல்ல முடியாது
இன்றும் வழி மறிக்காததால் உன்னைப் பார்க்க முடிந்தது
மீண்டும் மீண்டும் இடர் நிலத்தில் ஒலிக்கும்
உன் குரலை என்னால் கேட்க முடியாதிருக்கிறது.

அந்த தீர்வு நாள் வருகிறது
முட்கம்பிகளை உடைத்துக் கொண்டு
உன் காணிக்குள் செல்லப் போகிறாய்.
வா! நிலத்தை அள்ளிச் செல்பவர்களின்
கைகளை தட்டிப் பறித்தெடுப்போம்!

பாம்புகளும் பூச்சி பூரான்களும்
உனது கூடாரத்தை சுற்றி வளைக்கின்றன
டெனிஷா எனக்கும் புன்னகைப்பதற்கு கற்றுத்தருவாயா?

நான் ஒரு பயங்கரவாதி என்பதை
டெனிஷா நீ அறிவாயா?
இந்தப் பயங்கரவாதியால் பாதுகப்பிற்கு அச்சுறுத்தல்
என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள்
ஆனாலும் நான் இந்தத் தெருக்களால் செல்லுவேன்
இடர் படிந்த நிலத்தில் துயருடனிருக்கிற
உன் போலான குழந்தைகளை பார்க்க வேண்டும்.

சனங்களை மீண்டும் பெயர்ந்து செல்லச் சொல்லும்படி
அறிவிக்கப்பட்ட பொழுது
டெனிஷா மறுத்தபடி அழுதாள்
இந்த நிலம் அரசனால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது
காடுகளையும் மண்ணையும்
தின்று கொண்டிருக்கும் அரசன்
இந்த நிலத்தின் மேலால் பறந்தபடியிருக்கிறான்
குழந்தைகள் நிலமின்றி என்ன செய்யப் போகின்றனர்?
இன்னும் பறவைகள் திரும்பவில்லை
காவலின்றி கிடக்கும் நிலம் யாரின் கையில் இருக்கிறது
டெனிஷா முதலான குழந்தைகள் கேட்கத் தொடங்குகின்றனர்.


02
முன்பொரு காலத்தில் இந்த நிலம் எங்களிடமிருந்தது
குழந்தைகள் மகிழ்ந்திருந்தனர்
இந்த நிலத்தை போராளிகள் காவல் செய்தனர்.

நவீன படைகளின் தளபதியான புத்தர் படையெடுத்து
அரசமரங்களில் ஏறி
நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பொழுது
சனங்களின் நிலத்தில் அரசனின் நிழல் விழுந்து கொண்டிருக்கிறது
அரசன் கோயில்களை தின்கிறான்
அரசன் குளத்தை குடிக்கிறான்
அரசன் காடுகளை மேய்கிறான்
சாம்பல் கால்களை அணிந்து
நமது நகரங்களுக்கு வாளுடன் வந்து செல்கிறான்.

கொலை செய்து படைத்து வைத்திருக்கும்
என் முகத்தை அவர்கள் பல கோணங்களில் கமராக்களில்
பிடித்து வைத்திருக்கிறார்கள்
எல்லா வார்த்தைகளும் ஒரே தீர்ப்பைத்தான் பரிசளிக்கின்றன
நான் என்னை அழித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பயங்கரவாதி
இரவு நகரத்தில் இறங்கியிருந்த பொழுது
காதுகளில் உனது குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது
உனது காணியை நோக்கி மிதிவெடிகளுக்குள்ளால்
ஊடறுத்துச் செல்ல உன்னுடன் நானும் வருகிறேன்.
டெனிஷா உனக்கும் எனக்கும் ஒரு கூடாரத்தைகூட தராதிருக்கிறார்கள்
அழகான வீடு என்பது எப்படியிருக்குமென
நீயோ நானோ அறிந்திருக்கவில்லை
கூடாரங்களும் மரங்களும் பற்றைகளும் மண்ணுமாய்
காலத்தை கழிக்கிறோம்.
இடர் நிலத்தில் இன்னும் ஏன் இப்படி துயரம் நிகழ்கிறது?
______________________
புகைப்படம் பொன்னகர் குழந்தை டெனிஷா

போர்நிலம்

o தீபச்செல்வன் ----------------------------------------

வெறும் நிலத்திற்கு பொம்மைகள் திரும்புகின்றன
பிரயாணிப்பவர்கள் எலோரது கைகளிலும்
பெருத்த வண்டிகளிலும்
அவர்களிடமுள்ள அகலமான குறுக்குப் பைகளிலும்
நிலத்தை அள்ளிச் செல்லுவதாக
வயது முதிர்ந்தவர்கள் பிதற்றுகிறார்கள்.

போர் நிலத்தில் குழந்தையின் பொம்மை
இறந்து சிதைவுகளுடன் கிடக்கிறது
சொல்லப்பட்டிருக்கிற தாயைக் குறித்தோ
தன் தந்தையைக் குறித்தோ
எதுவும் கேட்காமல் மறந்துபோன குழந்தை
தன் பொம்மை தேடி பாதியாய் மீட்டிருக்கிறது.

தரப்பால் துண்டுகளுடன்
சில பூவரசம் தடிகளையும் எடுத்துக்கொண்டு
பொம்மை வீடுகளை
குழந்தைகள் மூட்டிக்கொண்டு அதனுள் இருக்கின்றனர்
சுவர்களோ தடுப்புக்களோ இல்லாத
பொம்மை வீட்டுக்குள்
காற்றும் புழுதியும் வெம்மையும்
நுழைந்து காலச் சித்திரமாய் படிந்திருக்கிறது.

பெருமழையின் ஈரம் ஊறி முட்டிய
நிலத்தில் கைகளால் மண் அணைத்தபடி
சேற்றில் குளிக்கும்
குழந்தைகளின் கைகளிலிருக்கிற பொம்மைகளின்
வீடுகளுக்காக போர் தொடங்குகிறது.

யுத்தம் பிடித்து அழிவுகள் நிறைந்துபோய்க் கிடக்கிற
நிலத்தின் வசனையை குழந்தைகள் முகர்கின்றனர்
வெடிபொருட்களின் புகை
இருதயத்தை ஊடறுத்துச் செல்கிறது
நஞ்சூறி நீலமாகிய தண்ணீரை குடித்து
குழந்தைகள் பசியாறுகின்றனர்.

தங்களைத் தாங்களே கொலை செய்யும் குழந்தைகளின்
கையில் உடைந்த பொம்மைகளை தவிர ஒன்றுமில்லை
போர் தின்று
நஞ்சுண்ட நிலத்தில் குந்தி இருப்பதற்காய் இன்னும் போர் நடக்கிறது.
_________________________

புகைப்படம் : விசுவமடுவில் பாதியாய் ஒரு பொம்மை இறந்துகிடக்கிறது

அம்மா திரும்பியிருக்கிற ஆற்றங்கரை காணி நிலம்


o தீபச்செல்வன் ----------------------------------------

புற்களும் பற்றைகளுமாய் கிடக்கும் நிலத்தில்
வீடு கரியிருக்கும் உருக்குலைந்த காணியில்
அம்மாவின் களைப்பு தணலூட்டப்பட்டிருக்கிறது
கடவுள்கள் எங்களை கைவிட்டதாய்
ஒரு நாள் உணர்ந்தபொழுது காணி நிலம் தரும்
பராசக்தியிடம் அம்மா உணவிழந்து பசியிருந்தாள்
ஆற்றங்கரையில் கிடக்கும் இந்தக் காணிநிலத்தை
பராசக்தி ஏன் கைவிட்டாள்?
யுத்தக் குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட தண்டனைக்காலத்தின்
எந்தச் சித்திரவதைகளையும்
பகிரப்போவதில்லை என்று அம்மா ஒப்புதலளித்திருக்கிறாள்.

வீடு திரும்பியிருக்கிறோம் என்பதை
இந்த ஆற்றங்கரைப் பறவைகள் கொண்டாடுகின்றன
ஒரு நாள் ஆறு பெருக்கெடுக்கையில்
என்னை கைகளில் அம்மா நிரப்பி வைத்திருந்தாள்
என்னை இழுத்துச் சென்றுவிட்டு வேர்களால் கரமளித்து
கரையேற வைத்தது ஆறு.
மூடியிருக்கும் ஆற்றங்கரையில் சிதைவடைந்த
கரைகளைக் காண முடியவில்லை.
கனவுக்காக சிந்திய அம்மாவின் உதிரம்
ஆற்றங்கரையில் படிந்திருக்கிறது.

கிளைகளை இழந்த நாவல் மரத்தில்
ஊஞ்சல்களை கட்டி தங்கை எப்படி ஆடப்போகிறாள்?
பட்டுப்போகாத அதன் வேர்களை தடவும் அம்மாவின் புன்னகையில்
அது ஆதி நிழலை பெய்கிறது
நாவல் மரத்தின் கீழாய்
நாவற்பழங்களை பொறுக்கும் குழந்தைகளை காணவில்லை.
சுவர்களை தேடும் அம்மா
உக்கிய கடவுகளின் புகைப்படங்களை எடுக்கிறாள்
அண்ணாவின் புகைப்படம் அழிந்து போயிருந்தது.

இன்னும் உயிருடன் இருக்கின்றன மருதானி மரம்
மற்றும் சில பூவரச மரங்கள்.
பாதி நிழலை வைத்திருக்கிறது மருதமரம்.
சாம்பல் சுவடுகளின் மேலாய் நாட்டப்பட்டிருக்கிறது புதிய கூடாரம்.
வானத்தின் காயம் ஆறிவிடும் என அம்மா நம்புவதைப்போல
மீண்டும் வீடு வளரும் என்று தங்கை நம்புகிறாள்.
தாழ்நிலத்தில் மீண்டும் பாடல்கள் முளைக்கின்றன.

கனவுகளின் பாத்திகளும் வரம்புகளும் உருக்குலைந்துபோக
எறியப்பட்ட பனை விதைகள் வடலியாய் வெடித்திருக்கின்றன
எங்கள் புன்னகை ஆற்றங்கரையை விட்டு
பெயர்ந்துபோன எல்லாப் பறவைகளையும் அழைத்துக்கொண்டிருக்கிறது.
__________________________
09.05.2010, இரத்தினபுரம், கிளிநொச்சி.
“எனது அம்மா மற்றும் தங்கை கடந்த வருடம் மே 16ஆம் நாள் இறுதி யுத்தத்தின் முடிவில் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்ட யுத்தத்திற்கான தண்டனைகளை முடித்துக் கொண்டு 09.05.2010 அன்று நாங்கள் வாழ்ந்த காணி நிலத்திற்கு திரும்பியிருக்கிறார்கள்”
புகைப்படம் : இரத்தினபுரத் தாழ் நிலப்பகுதியில் இருக்கிற எனது கூடாரம். (செப்டம்பர்) இம்மாதம் பெருமழைக்கு பாதுகாப்புத் தேடிக் கட்டப்பட்டது.

கனவு சிதைக்கும் இரகசியக் கொலையாளிகளால் வெட்டி சாய்க்கப்பட்ட தூபியும் கல்லறைகளும்

o தீபச்செல்வன் ----------------------------------------


பசியுடன் அலைபவனின் கனவுகள் நிரப்பட்ட அந்த தூபியை
கனவைச் சிதைக்கும் இரகசியக் கொலையாளிகள் சிதைத்து
அகழ்ந்து கொண்டுபோயிருக்கிறார்கள்.
அவன் அன்று முதல் தன்னை பசியுடன் எரித்தபடி
இந்தத் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறான்.

கல்லறைகளுக்கு அஞ்சி அவற்றை
அகழ்ந்து சிதைக்கும் அந்தக் கொலையாளிகள்
இந்த நகரத்தில் உலவுகின்றனர்.
நான் இன்று கனவு சிதறி அள்ளிக் கொண்டு செல்லப்பட்ட
அந்த பசி நிலத்திற்குச் சென்றேன்.
அவர்கள் எங்கள் கனவுகளை கொலை செய்வதற்காக
இரவுகளில் அலைவதாக
குழந்தைகள் அஞ்சுகின்றனர்.

அங்கு குருதி கொட்டியிருக்கிறது
கற் கோபுரத்தை அகற்றினோம் என்று
அந்தக் கொலையாளிகள் மாற்று உடைகளை அணிந்திருந்தபடி பேசுகின்றனர்.
அவன் பசியினால் தன்னை வருத்திய நாட்களில்
கோரியவைகளை
இந்த இனக் கொலையாளிகள்
சிதைக்க முற்படுகின்றனர்.
பசியினால் எரிந்து கொண்டிருந்த
விளக்கை சிதைத்து அகற்றி ஓரமாய்ப் போட்டிருக்கிறார்கள்.

அடங்காத ஆன்மாக்கள் தங்கியிருக்கும்
கல்லறைகளும் வெட்டி சிதைக்கப்பட்டுள்ள அதே நாட்களில்
ஒரு வெளிச்சத்தை
கொலை செய்ய முற்பட்டிருக்கிறார்கள்.
வெட்டி சாய்க்கப்பட்ட தூபியும் கல்லறைகளும்
தாய்மார்களுக்கு
பிள்ளைகள் உறங்கும் தொட்டில்களாகத் தெரிகின்றன.
அவர்களின் தூக்கம் கலைத்து தவிக்க வைத்து
அவர்களை கொலை செய்து
தாய்மார்களை மீளவும் துக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

பசியுடன் இருப்பவனின் பசி நிரம்பிய தூபியில்
அன்று சில பறவைகள் வந்து அமர்ந்திருந்தன.
யாரும் வெளிச்சம் ஏற்ற அனுமதிக்கப்படாதபடி
அஞ்சும் காலத்தால் அவன் கைவிடப்பட்டிருந்தான்.

பணத்தை அள்ளும் வணிகமும்
அடையாளத்தை அழிக்கும் வெறியும் நிரம்பிய உங்களிடம்
எங்கள் கனவுகள் குறித்து நிலவும் அச்சங்களை அவன் அறிவான்.

எங்கள் தெருக்களின் ஊரின் வெளிச்சங்ளை அணைக்க முற்பாடதீர்கள்.
கொலையாளிகளே !
பசியுடன் உடம்மை எரித்துக்கொண்டு அலைபவனை
இதே தெருவில் நீங்கள் சந்திக்கக்கூடும்.
அவன் அன்று முதல் தன்னை பசியுடன் எரித்தபடி
இந்தத் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறான்.
___________________
நன்றி : ஆதவன்

நிலக்கனவு

o தீபச்செல்வன் ----------------------------------------

01
கைநழுவிக் கொண்டிருக்கிற நிலத்தில்
இறப்பர் கூடாரங்கள் நெருங்கி எரிய
நாள் முழுதும் தீயில் நனைந்துகொண்டிருக்கிறோம்
மலத்திலும் சோற்றிலும் வந்தமரும்
இலையான்களை துரத்த இயலாதிருக்கையில்
எங்கள் காணிகளுக்குச் செல்லும் வீதிகளை
திருப்பி விடுகின்றனர்
நாங்கள் வெட்டிய வீதிகள் மூடுண்டு கிடக்க
புதிய புதிய வீதிகள் புதிய புதிய முகாங்களுக்குச் செல்கின்றன.

நாங்கள் மெலிந்து விட்டோம்
நிலத்திற்காய் குரல்கள் அழுகின்றன.

பார்க்கக்கூடிய தூரத்தில் குழந்தைகளின் காணிநிலம் தெரிகிறது
மிதிக்கப்பட்ட தென்னைகளின் பூக்களையும்
இளம் குருத்துக்களையும் ஓலைகளையும்
நாம் பார்த்திருக்க களவாடிச் செல்கிறார்கள்.

கற்களையும் மணலையும் அள்ளிச் செல்லும் வண்டிகள்
நமக்கு முன்னால் ஆறுகின்றன
நாங்கள் மிகவும் வடிப் போயிருக்கிறோம்.



02
மீண்டும் மீண்டும் நிலத்தில் மிதிவெடிகள் முளைக்கின்றன
நிலா வராதிருக்கிற இரவில்
எங்கள் காணிகளில் எண்ணிக்கையற்ற
மிதிவெடிகள் முளை விட்டிருக்கின்றன
மிதிவெடி மரமாகி மிதிவெடிகள் காய்த்துக் கொட்டுமா என
குழந்தைகள் கேள்விகளை இரவில் கேட்கின்றனர்.

விமானங்கள் பறப்பதற்காவும் அவை வந்திறங்குவதற்காகவும்
பணம் அரைக்கும் ஆலைகள் திறப்பதற்காகவும்
நாங்கள் மீண்டும் மீண்டும் அகதிகளாக்கப்படுகிறோம்
இந்த நிலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
நிலத்தில் உறங்குவதற்காய் குழந்தைகள் அழுகின்றனர்.

இந்தக் கிராமங்களில் பிறந்ததிற்காய்
வெயில் இறங்கியிருக்கும் வெளியில்
குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்
இந்த முகாம் தனது வாசலை அகலமாய் திறந்தேயிருக்கிறது.



03
துப்பாக்கிளோடான இராணுவங்களற்ற
முகாமின் வாசலின் ஊடாக நாங்கள் வெளியேறி எங்கே செல்வது?
இந்த முகாங்களிலும் அந்த முகாங்களிலும்
திறக்கப்பட்டும் மூடப்பட்டும்
நிலத்திற்கான வழிகள் தடுதடுக்கப்பட்டிருக்கின்றன.
பிறந்த நிலத்தில் சிறைவைக்கபபட்டவர்களாயிருக்க
எங்கள் காணிகள் மிக சமீபமாயிருக்கின்றன
மிதிவெடிகளை தூக்கி எறியும்
குழந்தைகள் தயாராக முன்னால் நிற்கின்றனர்.
வீட்டுக்குச் செல்லத் துடிக்கும் இந்தக் குழந்தைகள்
குண்டுகளுக்கோ துப்பாக்கிச் சூடுகளுக்கோ அஞ்சாதிருக்கின்றனர்
எந்த வாகனங்களிலும் ஏறிச் செல்ல மறுக்கின்றனர்.

கனவு நிலத்தில் பேய்களின் நிழல் படர்ந்து ஆக்கிரமிக்க முயல்கிறது
குழந்தைகளின் நிலக்கனவு தகிக்கிறது.
நாம் பார்த்துக் கொண்டிருக்க
பூர்வீக நிலத்தை அள்ளிச் செல்லும் பொழுது
குழந்தைகளின் கண்களை பொத்திக் கொள்வதா?
______________
07.08.2010

யாருடைய எலும்புக்கூடுகள்?


o தீபச்செல்வன் ----------------------------------------

மலக்குழிகளிலிருந்து தீர்க்கப்பட்ட எலும்புக்கூடுகள்
மூடிகளின் மேலால் வெளித்தள்ளுவதை
முதலில் குழந்தைகளே பார்த்தனர்
இவை உயிர் பிரிந்தலையும் யாருடைய எலும்புக்கூடுகள்?
சடலங்களுடன் கட்டிப் அடக்கம் செய்யப்பட்ட
பலகைத்துண்டுகளிலும் படிக்க முடியாத குறிப்புக்கள் இருக்கின்றன
சடலங்களுடன் மீட்கப்பட்ட
பனை மட்டைகளில் ஒலி பிரிந்த வார்த்தைகள் ஒட்டியிருக்கின்றன
அடக்கி மலக்குழிகளில் தள்ளப்பட்ட பொலித்தீன் பைகளின்
மூலைகளில் அடங்கியிருக்கும்
உயிரை தேடும் தாய்மார்கள் வந்திருக்கின்றனர்.

கழுத்தில் கட்டப்பட்டிருந்த சயனைட் குப்பிகளில்
இறுதி வார்த்தைகளை அவர் நிரப்பி விட்டுப் போயிருக்கிறார்கள்
கையில் இலக்கத்தகடுகள் கட்டிய கறுப்பு கயிறுகளில்
இருந்த முடிச்சுக்களினிடையில் துயர்க் காலம் படிந்திருக்கிறது
வரிச்சீருடையின் காற்சட்டை மட்டும்
அணிந்திருக்கும் இரண்டு எலும்புக்கூடுகளில்
அழிக்கப்பட்ட தாய்நிலத்தின் வரைபடம் கீறப்பட்டிருக்கிறது
கிணற்று வாளியில் தன் பிள்ளையின்
கண்களை ஒரு தாய் எடுத்து வைத்திருக்கிறாள்
ஏன் சடலங்கள் மலக்குழிக்குள் ஒளிக்கப்பட்டன?

உக்கிப்போகாத சதைத் துண்டுகள்
பெருங்கனவின் எச்சங்களாய் உருந்து கொட்டுகின்றன
கால்சட்டை மட்டும் அணிந்த ஒரு எலும்புக்கூட்டில்
ஒரு பெண் தன் கணவனின் மடியாத புன்னகையை தேடுகிறாள்.
பிடவை சுற்றப்பட்டிருக்கும் எலும்புக்கூட்டில்
ஆழமாக விழுந்திருக்கும் கீறல்களை எல்லோரும் எண்ணுகிறார்கள்
நிர்வாணமாயிருக்கும் எலும்புக்கூட்டில்
குழந்தைகள் தங்கள் தந்தை தாய்களை உணருகின்றனர்
அடையாளங்களாக பொலித்தீனில் உக்காது படிந்திருக்கும்
காயங்களையும் வீக்கங்களையும்
ஆற்றத் துடிக்கின்றனர் தாங்காதிருக்கிற தாய்மார்கள்
மலக்குழியில் சடலங்கள் நிறைத்து மகிழ்பவர்கள் யார்?

ஆக்கிரமிப்பாளர்களால் மூடப்பட்ட கிணற்றுக்குள்
உயிர் வதைபட்ட மணம் கிளம்புகிறதை நான் பார்க்கிறேன்
அவர்கள் இறங்கி கைகளை கழுவி மூழ்கிய கிணற்றுக்குள்
தண்ணீரில் இரத்தக்கறைகள் மிதக்கின்றன என தாய் சொல்லுகிறாள்
இடிபாடடைந்த சுவர்க்கரைகளில்
சித்திரவதையின் கோடுகள் நிறைந்த
எலும்புக்கூடுகளின் தலைகள் இறுக்கமாக மூடுண்டு கிடப்பதையும்
குழந்தைகள்தான் பார்த்தனர்
ஏன் ஏலும்புக்கூடுகள் வெளியில் வருகின்றன?

எலும்புக்கூடாகும் நகரத்தில்
குழந்தைகளின் கண்களை பொத்திக் கொண்டு வாருங்கள்
இவை தேடியலைந்து கொண்டிருக்கும் யாருடைய எலும்புக்கூடுகள்?
___________________________

04.06.2010

ஒளிப்படம் : கஜானி

பெருநிலம் : ஆதிக்கத்தின் அபாயம் படிந்திருக்கிறது


o தீபச்செல்வன் ----------------------------------------

அடர்த்தியாய் வளர்ந்துபோயிருக்கிற
பற்றைகளுக்குள் ஆதிக்கத்தின் அபாயம் படிந்திருக்கிறது .
குழந்தைகள் தூரத்திற்கு சென்று விளையாட வேண்டாம்
என்று அறிவுறுத்தும்
தாய்மார்கள் வேலிகளை அடைக்கவும்
கூடாரங்களுக்கு கதவுகளை பூட்டவும் முயல்கின்றனர்.

விட்டுச் சென்ற பொருட்கள் எங்கும் சிதைந்து கிடக்கின்றன.
மெலிந்து ஒடிந்து
வந்து சேரும் பொழுது முதலில் நிலத்தில்
விழுந்து ஆற அழவேண்டும் போலிருக்கிறது.
கைவிடப்பட்ட சனங்களின்
நிலத்தில் எங்கும் ஆதிக்கமும் ஆக்கிரமிப்புமே
நடப்படுகின்றன.
முன்பொரு காலத்தில் அழகாயிருந்த நமது நகரம்
புதிய வடிவத்தில்
சூறையாடப்படும் புத்திகளால் வார்க்கப்படுகிறது.
குழந்தைகள் பற்றைகளுக்குள் படிந்திருக்கும்
அபாயங்களை கிளற முற்படுகின்றனர்.

இது எனது நகரம் இல்லைப் போலிருக்கிறது.
இங்கு வந்திருப்பவர்கள் எனது மனிதர்கள் இல்லைப்போலிருக்கிறது.

காலம் எங்களை இழுத்தடித்து ஏமாற்றியிருக்கிறது.
ஒன்றுமில்லாத நிலத்தில்
சூறையாடப்பட்ட நமது பொருட்களை இழந்து
நிவாரணத் தகரங்களில் வேகிக்கொண்டிருக்கிறது
மீளத் தொடங்குகிற வாழ்வு.
முகாங்களில் கட்டி வைத்திருந்த மூட்டைகளுடன்
இன்னும் இன்னும் சனங்கள் வந்திறங்குகின்றனர்.
பதிவுகளும் புகைப்படங்களும்
பேரூந்துகளும் என்று
எல்லாவற்றிலும் அலைச்சலும்
துயரமும் வழங்கப்படுகிறது.
கடும் சித்திரவதைகளுக்குப் பின்னால்
அவர்கள் தங்களை தகரங்களால் மூடிக்கொள்கிறார்கள்.

கண்ணிவெடிகளை பணியாளர்கள் பிடுங்கிக்கொண்டிருக்கும்
பகுதியை தாண்டி மாடுகள் செல்கின்றன.
சிதைந்த சைக்கிள்களின் பாகங்கள் முதல்
எல்லாவற்றையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.
வாழ்வுக்காக மிகத் தவிக்கிறோம்.
விட்டுச்சென்ற சமையல் பாத்திரங்கள் முதல் புகைப்படங்கள் வரை
எல்லாவற்றையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த நிலத்திற்கு பொருத்தமற்ற
வேறுபடட் பொருட்களை கொண்டு வருகிறார்கள்.
அழிக்கப்பட்ட பெருநிலமெங்கும்
சிதைவுகளிலிருந்து செடிகள் முளைக்கின்றன.
அழிவு உறைந்துபோயிருக்கிற
அபாயச் சூழலில் இந்தக் குழந்தைகள் புன்னகைக்கத் தொடங்குகிறார்கள்.
__________________
13.10.2010

நன்றி : தீராநதி ஏப்பிரல் 2010

அகதித் துயர்வெளி

01.
மழைநாளில் இடம்பெயரும் தெருவொன்றில்
வெட்டப்பட்ட குழியைப்போலிருக்கும் கூடாரங்களுக்குள்
பாலஸ்தீனக் குழந்தைகள் வந்து ஏன் ஒளிந்திருக்கின்றனர்?

அகதிகளாக சனங்கள் வெற்றிக்கொள்ளப்பட்ட நாளில்
உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன
சிறுவர்கள் துப்பாக்கிகள் பிடிக்கும் நாளில்
தாய்மார்கள் பொதிகளை சுமந்தலையும் காடுகளின் வெளியில்
எல்லோருமே ஏதோ ஒரு நடவடிக்கையில் துரத்தப்பட்டனர்
வீடு அழித்துத் துடைக்கப்பட்டதையும்
நகரம் சிதைத்து உரு மாற்றப்பட்டதையும்
நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதையும்
இந்த அகதிச் சனங்கள் தாங்க முற்படுவர்
அகதிகளின் காலங்கள் அலைச்சலால் நிரம்பியிருக்கின்றன

மீண்டும் மீண்டும் பொருட்களைக் தூக்கிக்கொண்டு
சில மீற்றர்களுக்கோ சில கிலோ மீற்றர்களுக்கோ நடந்து செல்ல முடியாமல்
இந்தக் குழந்தைகள் கீழே அமர்ந்து விடுகின்றனர்
காடுகளுக்கோ சனங்கள் நுழைந்திராத கடல் வெளிகளுக்கோ
இந்தப் பாதங்கள் செல்ல விரும்புவதில்லை.
குழந்தைகளுக்கான உணவிற்காய்
அடுப்பு எரிந்து கொண்டிருந்த வீட்டை யுத்தத்தீ எரித்து விட்டது
கோகட் நகரத்தில் நீண்டுசென்ற அகதி வரிசைகள் மலைகளை இடித்தன.



02.
ஆப்கானிஸ்தானில் இடிபாடடைந்த கட்டிடங்களுக்குள்ளால்
ஈழக் குழந்தைகள் ஏன் செல்லுகின்றனர்?
கொங்கோ குடியரசின் சனங்கள் எங்கள் கூடாரத்திற்குள்
இரவில் வந்து தங்குகின்றனர்
ஒரு துண்டு ரொட்டிக்காகவும் ஒரு கிண்ணம் கஞ்சிக்காகவும்
ஒரு கோப்பை தண்ணீருக்காகவும்
உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன.

கனவுகள் நிராகரிக்கப்பட்டு பிரித்து சிதைக்கப்பட்ட
இணைந்த மாநிலத்தில் காலம் படியவிட்டிருக்கும்
ஈழ அகதித்துயரை
ஆக்கிரமிப்பாளர்கள் கிளறிக் கொண்டிருக்கிறார்கள்
ஒரு பெருமழையையோ சிறிய தூறலையோ
இந்தக் கூடாரங்கள் தாங்க முடியாதிருக்கின்றன
நிலத்தின்மீதாக அரும்பும் எல்லாக் கனவுகளையும் சீவியெறிந்து
நிலத்தை கொலைசெய்யும் ஆக்கிரமிப்பாளர்கள்
எல்லா திசைகளுக்கும்
மிகவேகமாக சென்றுகொண்டிருக்கின்றனர்
இனங்களின் நிறங்களை சூறையாடும் தந்திரங்களை
ஆக்கிரமிப்பாளர்களின் தலைவனோ சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை
சோமாலியாவின் பசிக்கிண்ணங்கள் மாத்தளனில் புதைக்கப்பட்டன.

காடுகளை சூறையாட முற்படுபவர்களும்
கிணறுகளை கொள்ளையடிக்க முற்படுபவர்களும்
நிலத்தை அள்ளிச் செல்ல முற்படுபவர்களும்
உரிமையை அழித்து முடிக்க புறப்பட்டவர்களும்
முதலில் குழந்தைகளைத்தான் கொலை செயதனர்
குழந்தைகளின் இரத்தில் அகதிச் சனங்களின் கனவு நனைந்துபோனது



03
சனங்கள் தங்கள் பூர்வீக நிலங்களிலிருந்து துரத்தப்பட்டதை
பெருகும் அகதித்துயிரினிடையில்
வெற்றிகொள்ளப்பட்ட அதிகாரம் நிறைந்திருக்கும்
தங்கள் கொண்டாட்டத்திற்குரிய நாளில் படைகள்
ஒரு கையில் துப்பாக்கியையும்
மறு கையில் மனித உரிமைப் பிரதிகளையும்
எடுத்துச் சென்றதாக
ஆக்கிரமிப்பாளர்களின் தலைவன் சொல்லுகிறான்.
படைகள் கொண்டு சென்ற மனித உரிமைப் பிரதிகளே
சனங்களை நெடுந்தூரத்திற்கு துரத்தின
எல்லாச் சனங்களும் வாழ்வு பிடுங்கப்பட்டு
பூர்வீக நிலத்திலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர்.

எல்லா குழந்தைகளும் புழுதியில் கிடந்தபடி
ஒரே மாதிரியான கிண்ணங்களை தூக்கி வைத்திருக்கின்றனர்
எப்பொழுதும் தூக்கிச் செல்லக்கூடிய
பொதிகளையும் எங்கோ ஒரு இடத்தில் விட்டுச்செல்லுகிறார்கள்
ஆக்கிரமிப்பாளர்கள் படையெடுக்கும்பொழுது
வீசும் குண்டுகளைவிடவும்
கொடுமையாக வார்த்தைகளை எறிகின்றனர்
உலகத்தில் கூடாரங்களும் அகதிகளும் நிறைக்கப்பட்டிருந்தாலும்
அகதிகள் சிரிக்கப் பழகியிருக்கிறார்கள்
டாபர் குழந்தைகள் தடிகளாலான கூடாரங்களுடன்
தேய்ந்த ஒற்றைச் செருப்புக்களையும்
கிழிந்த சட்டைகளையும் வைத்திருக்கின்றனர்
ஆணுறைகளை கொண்டு செல்லும் இராணுவம்
தங்கள் தலைவனுக்கு விடுமுறையில் பெண்குறிகளை கொண்டு வருகின்றனர்




04
யுத்தம் நீண்ட தூரத்திற்கு சனங்களைத் துரத்திவிடும்
மனிதாபிமானம் மிக்கது
ஈராக்கின் சிதைவுகளோடு தலமைத்தேசம் இன்னும் ஒளிர்ந்துகொண்டேயிருக்கிறது.

காஷ்மீரில் சனங்கள் துரத்தப்பட்டார்கள்
கோத்ராவில் சனங்கள் வெளியேற்றப்பட்டார்கள்
ஒரிசாவில் பெயர்த்தலைக்கப்பட்டார்கள்
பள்ளத்தாக்குகளுக்கும் மலைகளுக்கும் வனங்களுக்கும்
அனுப்பி வைக்கப்பட்டனர்
மணிப்பூரின் குழந்தைகளுடன்
டார்ஜிலிங் குழந்தைகளும் காடுகளை அழிக்கத் தொடங்கினர்
மதமும் கடலும் காடுமே சனங்களைத் துரத்துகின்றன
வெளியேற மறுக்கும் சனங்களை அவை கொல்லுகின்றன.

சனங்களிடமிருந்து நிலத்தை மீட்ட அரசின் வெற்றிக் கொடிகள்
அகதிகளின் கையிலிருந்து பறக்கின்றன.
எல்லாத் தேசங்களிலுமிருக்கும் அகதிகள்
எல்லா நாட்களிலும் அலைகின்றனர்.
சனங்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து
தொடர்ந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
__________________________________

ஜீன் 20 : உலக அகதிகள் நாளை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகிறது

எங்களுக்காய் யார் இருக்கிறார்கள்?

o தீபச்செல்வன் ----------------------------------------

குழந்தைகள் மீண்டும் மீண்டும் ஏன் பிறக்கின்றன
பதற்றங்களை கண்டு அதிரும்
இந்த குழந்தைகளை பார்க்கும் பொழுதெல்லாம்
முகம் கோணலாகி உடைகிறது
அவர்களின் புன்னகையை பார்ப்பவர்களில்லை
அவர்களின் வார்த்தைகளை கேட்பவர்களில்லை.

அந்தச் சிறுவன் பணத்திற்காக கழுத்து நெரித்து
கொல்லப்பட்ட நகரத்தில்
அவனின் குருதி படர்ந்த தெருவில்
நான் எப்படி அமைதியாக திரிவது?
அம்மா ! ஏன் என்னை இந்த மண்ணில் பெற்றிருக்கிறாய்?

யாரிடமும் கருணையில்லை
இரத்தமும் வன்மமும் படிந்த முகங்களுடன்
நான் பேசிக்கொண்டிருக்கிறேன்
என்னைச் சுற்றிலும்
மனிதர்களை தின்று களிக்கும் மிருகங்கள் அலைகின்றன
மிருகம் கவர்ந்து சென்ற நண்பனைப்போல
நான் ஏனம்மா இருக்கிறேன்?

கருணைக்காக தவிக்கும் குழந்தைகள்
எனக்கு முன்னால் செல்லுகின்றனர்
பிள்ளைகளுக்காக துடிக்கும் தாய்மார்கள்
என்னோடு பேசுகின்றனர்
அம்மா ஏன் என்னை இந்த மண்ணில் வளர்த்தாய்?

குழந்தைகளை இழுத்துச் செல்பவர்கள் என்னையும்
ஒரு இரவில் துப்பாக்கிகளால்
இழுத்துச் செல்ல முடியும்
உன்னையும் என்னையும் குறித்து யாரும் பேசுவதாயில்லை?
தங்கள் கோப்பைகளை குறித்தும்
தங்கள் வீடுகளைக் குறித்தும்
தங்கள் வண்டிகளைக் குறித்தும் அவர்கள் பேசுகிறார்கள்
அம்மா ஏன் வன்மம் நிறைந்த
மண்ணில் என்னை நடமாட வி;ட்டிருக்கிறாய்?

பூக்களை பார்க்க இன்னும் எதை நாம் இழக்க வேண்டும்?
துப்பாக்கிகளால் இருதயத்தை குத்திக்கொள்ளும் காலம்
ஏன் இன்னும் விரட்டுகிறது?
அமைதியான இரவில் இந்த நகரத் தெருவொன்றில்
நடந்து வர ஆசைப்படுகிறேன்
வெளிச்சங்களில் மகிழ்ச்சியுடன் உலவ விரும்புகிறேன்.
அம்மா அழகான வாழ்வு எப்படியிருக்கும்?

மகிழ்ச்சிக்கான ஏக்கங்கள் கனவாய்ப்போகின்றன
காலம் எல்லா வகையிலும் பிழைத்துப்போய்க்கிடக்கிறது
நீ இன்னும் வெயிலில் கிடந்து காய்கிறாய்
எங்களுக்காய் யாரம்மா இருக்கிறார்கள்?
____________________

நன்றி : ஆனந்தி

புகைப்படம் : அல்லாரை தடுப்பு முகாமில் 04.06.2010 அன்று எடுத்திருந்தேன்

கொலைக் காட்சிகளின் நிழல்

o தீபச்செல்வன் ----------------------------------------

01
கொலைக்காட்சிகளின் நிழலில் உயிரிழந்த சிறுவனின்
சித்திரவதையினால் எழும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

முதலில் எல்லோரையும் கைது செய்தனர்
சிலரது கண்களை கட்டினர்
சிலரது கைகளை கட்டினர்
இறுதியில் எல்லோருக்கும் கைகளும் கண்களும் கட்டப்பட்டன
வரிசையாக இருத்தப்பட்டனர்
புற்களின் மேலாயும் பற்றைகளின் வழியாகவும்
வதை எழும்பும் ஒலியுடன் இழுத்துச் செல்லப்பட்டனர்

மாபெரும் கொலைக் காட்சிகள் நிகழ்த்தப்பட்ட நிலத்தில்
குருதியின் மேலாய் பூக்களை தூவ
தந்தையை இனங்கண்ட சிறுமி காத்திருக்கிறாள்
மறுபடியும் அதே நாட்களில் வானம் உறைந்து கிடக்கிறது
உருக்கிக் கொட்டுகிறது
சத்தமிட்டு அழுதுகொண்டிருக்கிறது
கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டுள்ளன
துப்பாக்கிகள் விசாரணை செய்கின்றன
பிரிபடாத நிலம் இருண்டுபோய்க் கிடக்கிறது.

சடலங்களால் நிரம்பிய நிலத்தில்
கனவு முறியடிக்கப்பட்ட இரத்தத்தில்
அநியாயம் வென்று களிக்கும் வெறியில்
இனம் துடிக்கும் பெருங்கொலைகளின் தொடர்ச்சி நிகழ்ந்தன
அந்த இரத்தம் வெளியில் தெரிய வேண்டி வந்தது
அந்த கூக்குரல்கள் வெளியில் கேட்க வேண்டி வந்தன
அந்தக் காட்சிகள் வெளித்தெரிய வேண்டி வந்தன
சித்திரவதைகளினால் அந்தப் பெருநிலம் அதிர்ந்து கொண்டிருந்தது.

இரத்தம் வடிந்து நனைந்து போன நிலத்தில் இருத்தப்பட்டனர்
மண் சித்திரவதை செய்யப்பட்ட நிலத்தில் இருத்தப்பட்டனர்
மழை வெருண்டபடி மேலும் அழுகின்றது.



02
படைகளது உடைகள் இன்னும் பச்சை நிறமாகின்றன
அவர்கள் ஒரு நாட்டின் ஒரு தேசத்தின்
மனிதாபிமானத்திற்கான படைகளாக கௌரவிக்கப்படுகின்றனர்
துப்பாக்கிகளின் பிரியர்களாக
துருப்பிடித்த பல துப்பாக்கிகளை மீட்டு வைத்திருக்கின்றனர்
அவர்களது இராணுவப் புன்னகையிலிருந்து
வெளிப்பட்டுப் போகிறது பேய்களின் நடனத்தின் அதிர்வு.

அரசனின் பிரியத்தை அவர்கள் நிறைவேற்றுபவர்கள்
தளபதிகளின் உத்தரவை நடத்துபவர்கள்
இறுதியில் அரசனுக்கும் தளபதிகளுக்கும்
படைகள் இரத்தத்துடன் கூடிய சதைகளை படைக்கின்றனர்
தளபதி இன்னுமின்னும் வீங்குகிறான்
அரசன் இன்னும் இன்னும் வீங்குகிறான்
அரசனின் புன்னகை வீங்குகிறது
தளபதிகளின் நட்சத்திரங்கள் வீங்குகின்றன
படைகள் இன்னுமின்னும் வெறியூட்டி வளர்க்கப்படுகின்றனர்.

அவர்கள் யுத்தத்தின் தந்திரங்களை
வெற்றியின் குரூரங்களை பகிர மிக விரும்புகின்றனர்
இனஅழிப்பை அதற்கான படுகொலையை
மீள மீள விளக்கத் தயாராக இருக்கின்றனர்
வீரம் நிறைந்த அர்த்தத்தில்
சடலங்களின் முன்பாக கம்பீரமாக நிற்கவும்
சடலங்களை அள்ளி பெருங்கிடங்குகளில் நிறைக்கவும் விரும்புகின்றனர்.



03
வெள்ளைக் கொடிகள் கொலை பதுங்கியிருந்த
ஒற்றர்களாக மாறியிருந்தன
எதிர்வரும் எவரையும் ஏதோ ஒரு அடிப்டையில்
சுட்டுத் தள்ளுவதற்கு
அவர்கள் தயாராகவும் ஆர்வமாகவும் செயற்பட்டனர்
சரணடைந்தவர்கள் கொலைக்கு பரிசளிக்கப்பட்டனர்
கைது செய்யப்பட்டவர்கள்
சித்திரவதைகளுக்கு தெரிவுசெய்யப்பட்டார்கள்
கொன்ற பின்னர்
குழந்தைகளை வெள்ளை கொடிகளால் போர்த்தியிருந்தனர்
புணர்ந்து முடித்த பின்னர்
பெண்களையும் வெள்ளைக் கொடிகளால் மூடியிருந்தனர்.

மேல்சட்டைகளையும் கீழ் சட்டைகளையும்
கைகளில் விலங்காக்கியிருந்தனர்
கொலையின் தந்திரம் மிகுந்த கயிறுகளால்
கைகளை பிணைத்திருந்தனர்
ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே
தங்கள் குருதி வெளியேறிக் கொண்டிருந்ததை கண்டனர்
அவர்களது குருதி பிரட்டப்பட்ட மண்ணில் ஆழத்திற்கு
செல்லுவதை பார்த்துக் கொண்டிருந்தனர்
அவர்களுக்கு பலவிதமான சடலங்கள் காண்பிக்கப்பட்டன.

கொல்லவும் சித்திரவதை செய்யவும்
வேருடன் அழிக்கவும் பயிற்சி கொடுக்கப்பட்ட படைகள்
இறுதியில் சடலங்களின் முன்பாக நின்று
வெற்றியைப் பகிருவதுடன் தங்கள் கடமையை முடிப்பதில்லை
அழிவுக்கான புதிய புதிய கட்டளைகளை நிறைவேற்ற
அவர்கள் எப்பொழுதும் காத்திருக்கின்றனர்
குருதியின் கனவுகளை அவர்கள்
வளர்த்துக் கொண்டிருக்கவே விரும்புகின்றனர்

நிலத்தை கைபற்றவே படைகள் நடவடிக்கை செய்தன
மக்களைக்கொல்லவே படைகள் இறந்தனர்
அதனால் படைகள் மக்களைக் கொன்றனர்
அதனால் படைகள் போராளிகளை கொன்றனர்

அதனால் அரசன் நிலத்தை கொன்றான்.
குருதியாலும் சதையாலும்
அரசன் தன் மாளிகையை கட்டி வைத்திருக்கிறான்.



04
கொலையின் பயம் உறைந்த கண்களை
என்ன செய்தீர்கள்?
எல்லா முகங்களையும் பார்த்துக் தவித்துக் கொண்டிருக்கும்
ஏக்கம் உறைந்த முகங்களை என்ன செய்தீர்கள்?
தனித்து மாட்டுண்ட சிறுவனை என்ன செய்தீர்கள்?
கைதவறி விட்டுச் சென்ற குழந்தையை என்ன செய்தீர்கள்?


ஏன் சப்பாத்துக்கள் நெருங்கின?
ஏன் பயங்கரமான சீருடைகள் நெருங்கின?
ஏன் ஆழமாய் அழித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கிகள் நெருங்கின?
ஏன் அழித்து முடிக்கச் சொல்லிய கட்டளைகள் நெருங்கின?

சித்திரவதைகளால் உயிர் இழந்து கொண்டிருந்த
சிறுவனின் முகம்
கொலைக்காட்சிகளில் இன்னும் நெளிந்து கொண்டிருக்கிறது.
நிலத்திற்கிடையில் குழந்தைகள் அலைகின்றனர்.
______________________
19.05.2010

பின்குறிப்பு :

தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் அதிர்ச்சியுட்டும் மேலும் சில புகைப்படங்களுடன் அவர்கள் எப்படி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் என்ற விடயங்கள் உட்பட இறுதிக் களத்தில் இராணுவம் எப்படி செயற்பட்டது என்பதை விளக்கும் இராணுவ அதிகாரி ஒருவரது நேர்காணலுடன் கூடிய போர்க்குற்றம் பற்றிய விபரணப்படத்தை ‘சனல் 4’ தொலைக்காட்சியில் ஜொனாதன் மில்லர் வெளியிட்டுள்ளார்.

இணைப்பு :

http://link.brightcove.com/services/player/bcpid62612474001?bctid=86382573001

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24585&cat=1

http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687
ஆங்கில மொழிபெயர்ப்பு
THE SILHOUETTE OF MURDEROUS SCENES

கிழக்கில் கிடந்த பச்சை சூரியன்

o தீபச்செல்வன் ----------------------------------------

குருதி படர்ந்த அந்த மணல் வெளியில் சனங்கள்
மிகத் தாமதமாகவே வெளியேறினர்
நள்ளிரவு வரையில் துப்பாக்கியை நீட்டியிருந்த போராளியும்
கடைசி நம்பிக்கையை இழக்கிறான்
சனங்கள் பிணங்களின் வீதிகளில் சென்று கொண்டிருந்தனர்
புன்னகை இன்னும் முள்ளி வாய்க்காலில்
இருக்கிறது என்ற சகோதரி துயர் வழியும் விரல்களின் ஊடே
போகத் தொடங்குகிறாள்.
வானம் பெரியளவில் இருளத் தொடங்கியது.

யாரும் நம்பாத முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தன
யாராலும் தாங்க முடியாத கண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது
மபெரும் காயம் ஏற்பட்டு குருதி வழிந்து கொண்டிருந்தது.

கட்டளைகள் ஓய்ந்து கோரிக்கைள் சரிந்தன
வெள்ளைத்துணிகளில் வடியும் வெறித்தனமாக பகிரப்பட்ட குருதி
எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருந்தது.
எப்பொழுதும் வெடித்து சாம்பலாகும் வெளியில்
நீங்கள் யாரையோ விட்டு வந்திருக்கிறீர்கள்.
ஆன்மாக்கள் அலையும் துயர் படிந்த கிடங்கில்
யாரோ சமராடிக் கொண்டிருந்தார்கள்.
மைதானத்தை பாதுகாக்க யாரோ இறுதிவரை முனைந்திருக்கிறார்கள்.

எல்லா துப்பாக்கிகளும் அடங்கிய பொழுது
மௌனமாய் வைக்கப்பட்ட பொழுது
என்ன மிஞ்சியிருந்தது?
சகோதரியே கைவிடப்பட்ட புன்னகை கொல்லப்பட்டதை நீ பார்த்தாயா?
உனது நம்பிக்கை என்னவாகிப் போனது?
விரல்கள் உடைந்து விழும் என்று நம்பினாயா?
எல்லா தாகங்களையும் கனவின் பசியையும் மணல் முடிக்கொண்டது.

சூரியனை சரித்து போட்டிருந்தார்கள்
உயிர் வயலில் எல்லாக் கன்றுகளும் இறந்து கிடந்தன
ஒரு தாய் தன் குழந்தைகளை அணைத்தபடி இறந்து கிடந்ததை
நீ பார்த்திருப்பாயா?
கடைசியில் அங்கு ஏன் நெருப்பெரிந்து இருள் பிறந்தது?
ஏன் வானம் இருண்டு மழை பொழிந்தது
அந்த மனிதனின் இறுதி வார்த்தைகள் என்ன?
வானம் என்ன சொல்லி அழுது கொண்டிருந்தது?
பெருநிலம் உறைந்து போயிருந்தது?
நமது நகரங்கள் உடைந்து போயிருந்தன?
கடைசி மனிதன் எங்கோ வெளியேறிச் சென்றிருக்கிறான்.

புதருக்கிடையில் குருதி பாய்ந்து கொண்டிருக்க
கபாளம் கொள்ளையடிக்கப்பட்டு கிழக்கில் கிடந்தது பச்சை சூரியன்.
எல்லோரது முகத்தையும் குருதி சிவப்பாய் நனைத்து அபாயத்தை பூசியது.
துடைத்தெறிய முடியாத மாபெரும் கனவு
பெருநிலத்தில் தங்கியிருக்க
இருதயங்களின் இறுதி நிமிடம் முள்ளுடைந்து நிற்கிறது
(மே 18)
_________________
தீபச்செல்வன்

நன்றி : பொங்குதமிழ்

கைது செய்யப்பட்ட தாயின் சரணடைந்த குழந்தை


o தீபச்செல்வன் ----------------------------------------

நந்திக்கடலில் விழுந்திருந்தன
நிறைய முகங்கள்
சயனட் குப்பிகளில் குழந்தைகள்
பால் குடித்தனர்.
தாய்மார்கள் துவக்குகளை வைத்திருந்தபடி
குழந்தைகளை சுமந்து சென்றனர்.

முள்ளி வாய்க்காலின் கிடங்குகள்
எல்லாம் மூடுண்டு விடுகிறது.
கிடங்குகளிலிருந்து எழும்பி வருகின்றனர்
பிணங்களும் அதன் குழந்தைகளும்.

கடல் வீழ்ந்துவிட மணல் பெயர்ந்து
கடலில் அள்ளுண்டு செல்லுகிறது.
முள்ளுக் கம்பிகள் வரவேற்கின்றன
ஒற்றை தேச முகங்களை அணிந்தபடி.

விடுவிக்கப்பட்ட பகுதி மரணத்தின்
குளிர் அறைகளாக மாறிவிட
சித்திரவதையின் பாடல்களில்
இரவு அதிர்ந்துகொண்டேயிருக்கிறது.
பெருநிலம் மயானமாக மாற
அகதிமுகாம்கள் நெருங்குகின்றன.

தாய் கைது செய்யப்பட்டிருந்தாள்.
குழந்தை சரணடைந்திருந்தது.
துப்பாக்கி இருவருக்கும் நடுவில்
நின்று கொண்டிருக்கிறது.
முட்கம்பி ஆடையாக படர்கிறது.
நந்திக்கடலின் பிணங்கள்
ஒதுங்கி முடிகின்றன.
ஈழத்தை இலங்கை விழுங்கி முடிக்கிறது.
__________________
17 மே 2009

(மே மாதம் கவிதைகள்)

நன்றி : அம்ருதா ஜீன் 2009

சொற்களற்றலைகிற நகரம்

o தீபச்செல்வன் ----------------------------------------
மரணம் கொடு முகத்துடன்
குழந்தைகளை விழுங்கி முடிக்கிறது.
ஒரு போராளியுடன்
சுற்றியிருந்த இருபது சனங்கள்
சுட்டு விழுத்தப்பட்டனர்.
இலக்கத்தில் முழ்கியிருக்கிறது வீடு.

எண்ணிக்கையின் மாறாட்டங்களில்
மரணங்களை கொண்டாடி திடுக்குறுகிறவர்கள்
சொற்களற்றலையும் நகரத்தின்
வாடிய பூக்களை கண்டு ஏங்கினர்.

பத்திரிகையின் முகப்பில்
சொற்களில் கண்ணீர் நிறைந்திருந்தது
துவக்குகள் வாசித்து
பின் தொடருகிற பத்திரிகை நிறுவனத்தின்
வாசலில்
குருதியின் பெரு எச்சரிக்கை குவிந்திருந்தது.

சவப்பெட்டிகள் தயாராக இருக்க
பிணங்களை தொலைத்தழுகிற மிஞ்சிய ஒருவன்
அதற்குள் படுத்திருக்கிறான்.
எதுவும் பேச முடியாதிருக்கிறது நகரம்.

கொடிகளால் முற்றுகையிட்டிருக்கிற நகரமெங்கும்
வரையப்பட்டிருக்கிறது
சனங்களின் தோல்வியின் கடைசிப் பிரதேசம்.
குழந்தைகள்
தடைசெய்யப்பட்ட சீருடைகளை அணிந்தபடி
உதிர்ந்து கொண்டிருக்கிற
பிணங்களின் கீழ் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

சொற்களற்றலைந்த நகரம் கடைசியில்
சவப்பெட்டியினுள் ஒளிந்தலைய
குழந்தைகள் அவற்றை சுமந்தபடி
நகரமெங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.
__________________
20.05.2009

(மே மாதம் கவிதைகள்)

நன்றி வடக்குவாசல் 2009

எல்லாக கண்களையும் இழந்த சகோதரியின் கனவு

o தீபச்செல்வன் ----------------------------------------


யுத்தத்தை முடித்துத்திரும்பும்படி வழியனுப்பிய
தன் இரண்டாவது கணவனையும்
இழந்த சகோதரி
இன்னும் உயிருடன் இருப்பதாக சொல்லியனுப்பியிருக்கிறாள்
பதிலற்று கரைந்து கொண்டிருக்கின்றன
என் வார்த்தைகள்
நொந்துபோன குரல்களால்
தன் காட்சிகளை அவள் கோரிக்கொண்டிருக்கிறாள்.
எப்பொழுதும் அவளுக்கு
முன்னாள் விளையாடித் திரிந்துகொண்டிருந்த
தன் குழந்தைகளை தேடுகிறாள்.

அழிக்கப்பட்ட காட்சிகள்
ஆன்மைவை நிறைத்துக்கொண்டிருக்கின்றன
எல்லாக் கண்களையும் இழந்துபோயிருக்கிறேன்
என்பதை திரும்பத் திரும்ப சொல்கிறாள்
கண்களை பிடுங்கிச் சென்ற ஷெல்
அவளது இரண்டு பெண் குழந்தைகளையும் விழுத்திச் சென்றது.
கண்களற்று துடித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான்
அவள் மாபெரும் சனங்கள்
கண்களை இழந்த
மைதானத்தலிருந்து அகற்றப்பட்டாள்
கண்கள் தொலைந்து போனது
குழந்தைகளையும் கண்களையும் அவள் தேடிக்கொண்டிருந்தாள்
சிதறிய குழந்தைகளின் குருதி
காயமடைந்த அவளின் கண்கள் இருந்த இடத்தையும் நனைத்தன.

குழந்தைகளின் குருதியால் ஊறியிருந்தபடி
பெருநிலத்தை அவள் இறுதியில் பார்த்திருந்தாள்
என்றும் தன்னால் தன் நிலத்தை
பார்க்க முடியாதபடி திரும்பியிருக்கிறாள்.

கடலால் கொண்டு செல்லப்பட்ட நாளிலிருந்து
கனவிழந்து தன் உலகத்தை தேடிக்கொண்டிருக்கிறாள்
உடலெங்கும் ஷெல் துண்டுகள் ஓடியலைகின்றன
கண்களை இழந்த சகோதரி கனவுகளைப் பற்றியே பேசுகின்றாள்.
_________________________

நன்றி : மறுபாதி இதழ் 03

இறுதிநாள் வழியில் தொலைந்தவர்கள்

o தீபச்செல்வன் ----------------------------------------

வழியில் தொலைந்த ஆடுகளின் கதைகளால்
நிறைந்துபோயிருக்கிறது இந்த நாள்.
இந்த வானொலி* வழி தவறியவர்களை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிற இரவு நிகழ்ச்சியை
ஓலிபரப்பிக்கொண்டிருக்கிறது.
கைகளுக்குளிலிருந்து எப்படி நழுவி விழுந்திர்கள்
என்று ஒவ்வொரு தாய்மார்களும்
இரவு நிகழ்ச்சியில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இறுதி நாளிலிருந்து இன்று வரை
உனதம்மா** உன்னை*** தேடிக்கொண்டிருக்கிறாள்.
உன் ஞாபகமாய் என்னிடமிருக்கிற ஒரு சேட்டை
எப்படி பத்திரிகையில் விளம்பரமாக பிரசுரிக்க முடியும்?
புகைப்படங்கள் தொலைந்த வழியில்
வழி தவறியவர்களின்
குருதியுறைந்த உடல்கள் பற்றிய கதைகளை
வேறொரு பத்திரிகையின்**** மற்றொரு
பக்கம் எழுதிக்கொண்டேயிருக்கிறது.

தொலைந்தவர்களை கடிதங்களால் விசாரித்துக்கொண்டேயிருக்கிறது
இன்னொரு பத்திரிகை. *****
தேடிக்கொண்டிருப்பவர்களின்
துயரம் மிகுந்த சொற்களை நிரப்பிய கடிதங்களை
கொண்டு வந்தபடி
ஒவ்வொரு வாரமும் வந்துகொண்டிருக்கிறது.

எல்லோரும் திரும்பிவிடுவார்கள் என்ற
நம்பிக்கையை மட்டுமே இந்தக் கடிதங்கள் வாசிக்கின்றன.
தவறி விழுந்த குழந்தையின்
அழுகை எப்படி அடங்கிப்போயிருக்கும்?
கை நழுவி மறைந்த சிறுமியின்
இரவு எப்படியிருக்கும்?
தனித்து தொலைந்த சிறுவனின் வழி எப்படியிருக்கும்?
குழந்தைகளை இழந்த தாயின் வலி எப்படியிருக்கும்?
மனைவியை பிரிந்த கணவனின் திசை எப்படியிருக்கும்?
சகோதரர்களை பிரிந்தவர்களது துயர் எப்படியிருக்கும்?
எல்லோரையும் பிரிந்தவர்களது துயரால் மிகுந்திருக்கிற
கடிதங்கள் அதிகரித்தபடி பிரிவை அளந்துகொண்டிருக்கின்றன.
பதில் வார்த்தைளற்றுக் கிடக்கிற கேள்விகளால்
இந்த இரவு குலைந்து கிடக்கிறது.

காத்திருப்பும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும்
வளர்ந்துகொண்டேயிருக்கிறது.
அவர்கள் தவறிய வழிகள் மூடுண்டபடி
பிரிவை உயர்த்துகிற கடிதங்கள் மிக ஆழமாக தாழ்க்கப்பட்டு
மண் கொட்டிப் பரவியிருக்கிறது.
யாரும் திரும்பியதாக இல்லை என்பதை
மிகச் சோகமாக சொல்ல முடியாமல்
கரைந்து போகிறது அந்த வானொலியின் இரவு நிகழ்ச்சி.
மகிழ்ச்சி தரும் சொற்களான
தவறிய யாரேனும் ஒருவர் எழுதிய கடிதம் ஒன்றுக்காக
உன் அம்மா காத்துக்கொண்டிருக்கிறாள்.
----------
09.12.2009
*சூரியன் எப்எம், **கஜானந்தினுடைய அம்மா, ***கஜானந், ****சுடரொளி வார இதழ், *****மித்திரன் வார இதழ்

வருடத்தை தொடருகிற போரின் பிரகடனம்

o தீபச்செல்வன் ----------------------------------------

எல்லா வருடங்களும்
வெறும் இரவுகளைத்தான் உதிர்கின்றன.
நான் உன்னை சந்திக்காத
எதையும் பகிராத
கடந்த வருடத்தைப்போல
இந்த வருடம்
நடு இரவில் வந்து
என்னை எழுப்பக் காத்திருக்கிறது.

போர் நமது கிராமத்தை அழித்து
கனவை முடிவுறுத்துவதாய்
முன் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிற நாளில்
இதுவரை கைப்பற்றப்பட்ட
எல்லாம் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.

நீயும் நானும்
வெகு சுலபமாக புறக்கணிக்கப்பட்டு
போரால் அணுகிக்கொண்டிருக்கிற
வெளியில்
துடிதுடித்துக்கொண்டிருக்கிறது
கொண்டாட்டங்களுக்குரிய நமது வீடு.

உன்னையும் நமது சொற்களையும்
நாமிருந்து
பகிர்ந்துருக வேண்டிய வெளிகளையும்
ஒரு சாரைப்பாம்பு
மிக அமைதியாக தின்று முடிக்கிறது.
மேலும்
வருடத்தை தொடருகிறது
அலைச்சலுக்கான போரின் பிரகடனம்.
_____________________
14.04.2009

(கடந்த வருடத்தை நினைவு கூருவதற்காய் இந்தக் கவிதை பகிரப்படுகிறது)

நன்றி : இருக்கிறம் ஏப்பிரல் 2009

அப்பத்தின் கதை பற்றிய இரண்டாவது உரையாடல்

o தீபச்செல்வன் ----------------------------------------

எப்பொழுதும் அந்த முதல் உரையாடலை
நீ ஞாபகப்படுத்தியபடியிருப்பாய்.
சிகரட் குறைத்துண்டுகள் ஒதுங்கி குவிந்திருக்கும்
அந்தச் பாதிச்சுவரில்
அமர்ந்துகொண்டு மீளவும் மீளவும்
நாம் பேசியிருக்கிறோம்.
ஓவ்வொரு இரவும் கடைசியில் நம்மை
தனித்து பேச வைத்திருக்கிறது.
அப்பங்களை தூக்கிச் செல்லும்
உனது காலையும்
அதற்கான மாவை இடித்துக்கொண்டிருக்கும்
மாலை நேரத்தையும் நாம் இழந்துபோயிருக்கிறோம்.
போரினால் நாம் வாழ்வை இழந்து போயிருக்கிறோம்.

சிகரட் புகைக்கும் தேனீர்க்கடையின்
அருகிலிருக்கிற ஓடையில்
வரிசையாய் படிந்துபோயிருக்கிறது சாம்பல்.
அசாத்தியமாக வளர்ச்சி பெற்ற நமது நகரத்தில்
பியரை அருந்தியபடி நாம் அலைந்திருக்கிறோம்.
சாரயக் கடைகளில்
மதுக்கிண்ணங்களை தூக்கி வைத்திருத்தபடி
இருவரும் அப்பங்களை விற்கும் அனுபவங்களை
பகிர்ந்திருக்கும்பொழுது
நமது நகரம் வசீகரமான வெளிச்சத்தில்
ஒளிர்ந்தபடியிருந்தது.
நமது நகரத்திற்காக நாம் உழைத்திருக்கிறோம்.
அதை மிகவும் நேசித்திருக்கிறோம்.
கடைகளின் பின்புறமாக குந்தியிருந்து
உரையாடிக்கொண்டிருந்த பொழுது
விமானங்களுக்கு அஞ்சி பதுங்கியிருந்தபொழுது
நீ எனக்குப் பக்கத்திலிருந்தாய்.

நண்பனே சிகரட்டிற்காய் அடிபடுகிறவர்களாகத்தான்
எப்பொழுதுமே இருந்திருக்கிறோம்.
எல்லாவற்றையும் போலவே இப்பொழுது
நீ அப்பங்களை கூவி விற்பதற்கான
நமது நகரமும் இல்லை.
உனது அப்பங்களும் இல்லை.
சிகரட்டுக்களும் இல்லை.
மாவை இடித்துக்கொண்டிருக்கிற
மாலை நேரமும் இல்லை.
ஆனால் நீ நெருக்கத்தின் பெரிய உரையாடலாய்
முடியாத சிகரட்டாய்
எனக்குள் புகைந்து கொண்டிருக்கிறாய்.
அந்தப் பாதிச்சுவரின் சிதைவில்
சிகரட் துண்டுகள் என்னவாகியிருக்கின்றன?
போர் எல்லாவற்றையும் அழித்து விட்டது.
உன்னை இழந்திருக்க கூடாது.
உன்னுடன் நாம் எல்லாவற்றையும் இழந்திருக்கிறோம்.

கைவிடப்பட்ட உனது சடலத்தை
யாரோ கண்டு வந்ததாக சொல்லுகிறபோது
உனது அப்பம் பற்றிய
இரண்டாவது உரையாடல் தனித்துத் தொடங்கி
முடிவற்று நீளுகிறது.
எங்கு தவறிப் போயிருக்கிறாய்?

தகர்ந்து போயிருக்கிற நகரத்திற்கு நான் திரும்பப்போவதில்லை.
யாரேனும் அங்கு அப்பங்களை கூவிக்கொண்டிருப்பார்களா?
அப்பங்களை வாங்க யார்தான் காத்துக்கொண்டிருப்பார்கள்?
மூட்டத் தொடங்கும் ஒவ்வொரு சிகரட்டும்
உனக்காக புகைந்துகொண்டிருக்கிறது.
உனக்காக மது நிறைக்கப்பட்ட கிண்ணம்
எப்பொழுதும் எனக்கு முன்னாலிருக்கிறது.
___________________
08.09.2009 .கிளிநொச்சி நகரத்தின் நண்பர்களில் மிகவும் பிரியமான எனது நண்பன் ஸ்ரீகஜானாந். இறுதிப் போரில் சிக்குண்டு இறந்து போயிருப்பதாகவும் அவனின் சடலத்தை கண்டு வந்தாகவும் கூறுகிறார்கள். தடுப்பு முகாங்கள் எங்கும் தேடிய பொழுது கிடைக்கப்பெறவில்லை.

நன்றி : எதுவரை பெப்ருவரி - மார்ச் 2010

கனவு அரும்பியிருந்த நினைவிடம்

o தீபச்செல்வன் ----------------------------------------


நெருங்க முடியாதபடி அந்த நினைவிடத்தை
பயங்கரத்தால் அவர்கள் காவலிட்டிருந்தனர்.
நினைவிடங்களில்
கனவுகள் வெளித் தள்ளுவதாய்
குழந்தைகளை புதைத்த தாய்மார்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

எல்லாத் தாய்மார்களும் ஆன்மாக்கள்
உள்ளடங்கியிருக்கும் நினைவுக் கோபுரத்தை
வணக்கிச் செல்கின்றனர்.

கனவுகள் அரும்பியிருந்த
மாபெரும் பசியின் நினைவிடத்தை
ஒரு இரவு பேரதிர்ச்சி கொள்ளும் விதமாக
சிதைத்துச் சென்றனர்.
யார் சிதைத்தார்கள்?
ஏன் சிதைத்தார்கள்?
பகிரங்கப்படுத்தப்படாத அந்த இரவில்
கனவின் துயர் வழிகிறது.

மர்மமாக வரும் நபர்கள் குழந்தைகளை
இழுச்துச் சென்ற அதே இரவில்
இந்த நினைவிடம் தகர்க்கப்பட்டிருக்கிறது.
அந்தக் குழந்தை தன் பெற்றோரை
தேடி துடித்தழுகையில்
அவனின் கனவு படிந்த மடி சிதைக்கப்பட்டது.

கனவின் பெரும் பசி ஓங்கியிருந்த
முகத்தை யாரால் மறக்க முடியும்?
எங்கள் பசி நிறைந்த கோப்பைகளில்
குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் சதைகளும்
உடைகளும்தான் விழுகின்றன.

நாங்கள் மீள மீள கொல்லப்படுகிறோம்
என்பதை சொல்லுவதற்கு வேறு வார்த்தைகளில்லை !
குழந்தைகளே தெருவுக்கு வர அஞ்சியிருக்கும்
நகரத்தில் தகர்க்கப்பட்டு
எறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில்
குழந்தைகளின் அச்சம் நிறைந்த குருதி படர்ந்திருக்கிறது.

ஒரு கனவைச் சிதைப்பதும்
ஒரு குழந்தையின் கழுத்தை நெறிப்பதும் ஒரே துயரை தருகிறது.
திலீபனின் பசி இருதயத்திற்குள் புகைந்து கொண்டிருக்கிறதை
தாய்மார்கள் பார்த்துச் செல்லுகிறார்கள்.
_____________________
நன்றி : பொங்கு தமிழ்

முட்கம்பிகளில் படிகிற அடையாள இலக்கம்

o தீபச்செல்வன் ----------------------------------------

ஒரு தனித்தீவில் உன்னைச்
சிறையிட்டிருக்கிறார்கள்.
முதுகில் குத்தப்பட்ட அடையாள இலக்கம்
முட்கம்பியில் படிந்து கிடக்கிறது.
மரங்களில் பொருத்தப்பட்டிருக்கும்
காவலரண்கள் என்னைக் கடந்து கொண்டிருக்கிறது.
காற்று அலையும்
வெளிகளில் முடிவற்ற வெறுமை நிரம்புகிறது.

முட்கம்பிகளால் கட்டப்பட்ட வீட்டில்
கோழி செட்டையடித்து துடிதுடித்துக்கொண்டிருக்கிறது.
வானம் கரைந்து சோற்றுப் பானைக்குள் நிறைந்துவிட
பிள்ளைகளுக்காக வாழும்
நம்பிக்கையை கட்டியெழுப்புகிறாய்.
நீ அறிந்திராத தெருக்களைப் பற்றி
நான் எதுவும் பேசிக்கொண்டிருக்கப்போவதில்லை.
நேரம் வேகமாக கடந்து கொண்டிருக்கிறது.

பிள்ளைமீது முட்கம்பி ஆடையென
உடுக்கப்பட்டிருக்கிறது.
நான் வரும்போது பச்சை வயல்களில்
சித்திரவதையின்
பழைய கூக்குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன.
ஆண்குறிகளும் யோனிகளும்
கடல் நீரேரியில் மிதந்து கொண்டிருக்கிறது.
பெரிய பாலத்தை
தின்று மொய்க்கிறது காவலரண்கள்.

இரவுக்கும் பகலுக்கும் இடையில்
கிடந்து நீ நசிபடுகிறாய்.
அடையாள அட்டை
எனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
நெடு நேரத்தின் பின்னர் வந்திருக்கிற
நிவாரண உணவில்
நவீன பொருளாதாரத்தை கணக்கிடுகிறாய்.
சுவர்களற்று புழுதி
நுழைகிற வீட்டில் காலனிய நகரங்கள்
வந்து படிந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் சொற்கள் இருக்கின்றன.
நீ எதையோ சொல்லாமல் போகிறாய்
நம்மை கொண்டு வந்து
குவித்து விட்டிருக்கிற குண்டுகள்
தீர்ந்த பெட்டிகளில் நிரப்பிவிடப்பட்டிருக்கிறது
உனது சொற்கள்.
நீ எழுத முடியாதிருக்கிற கவிதையை
என்னிடம் வாசித்துவி;ட்டுப்போ.
பின்னால் சொற்கள் கொட்டிக் கொண்டிருக்கின்றன.

எனக்கான நேரம் முடிவடைகிறபோது
கோழிகள் செட்டையடிக்கிற சத்தம்
கேட்கத் தொடங்குகிறது.
இப்பொழுது உனது அடையாள
இலக்கத்தை நான் மீளவும் ஞாபகப்படுத்துகிறேன்.
____________________-
14.5.2009