பக்கம் 60 விலை :ரூ.30௦/ - தொடர்புக்கு..... 94896 66817
நூலில் இருந்து.......
குடித்தல் என்பது கிறித்துவ நாகரிகத்தின் பழைய நண்பனாகும். எனவே, அது இப்பொழுது பழைய
போதைப்பொருளாகிவிட்டது. அவர்களுக்கு எல்லாமே புதிது புதிதாக வேண்டும். இது மேலும் கிறித்துவ
நாகரிகத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்……
நேட்டோ தலைமையில் = கொலம்பஸ் திருடன் = ஜாவிது திருடன் மோசஸ்
தான் தேர்ந்தெடுத்த மக்களுக்காக ஜாவிதை அனுப்புகிறார். (மோசேயின் 4ஆம் புத்தகம், 13ஆம் அதிகாரம்)
கொலம்பஸ், செவ்விந்தியர்களின்
தங்கம், பட்டு, நறுமணப் பொருட்களைக் கொள்ளையிட அன்று அனுப்பப்பட்டார். இன்று, நேட்டோ படைகள் அனுப்பப்படுகின்றன ஆப்கனுக்கு.... எதற்காக? விலையுயர்ந்த கற்கள், தாமிரம் மற்றும் தாது வளங்களைக் கொள்ளையிட.....
புதிய ஆயுதங்களைச் சோதனையிட....
அமெரிக்கா ஓர் நடுநிலையான நாடல்ல.... உலகின் முதன்மையான பயங்கரவாத
அரசு.... அவர்கள் தலைமையில் ஈழம் அமைந்தாலும் அங்கு கருணாவைப்போல் இன்னொரு பொம்மை அதிபர்
உருவாவார். பாலியல் சுற்றுலா தளமாக யாழ்ப்பாணம் மாறும்....
தமிழ்நாட்டில் நீதிக்கட்சியும், பெரியாரும் பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் எனக்கூறி, வெள்ளையரை ஆதரிக்கும் தவறான முடிவை எடுத்தனர்.
வெள்ளையரை ஆதரிப்பது என்பது, கிறித்துவத்தை
ஆதரிப்பது, கிறித்துவ மயமாக்குவதுடன்
தொடர்புடையது. இந்த நாடு காலனிய ஆதிக்கத்திற்கு உட்படுவதையும் ஆதரிப்பதாகும்....
இந்தியாவின் தேக்க நிலைக்கு பிரிட்டனின் முதலாளித்துவம் முற்றுப்புள்ளி
வைத்து, இந்தியாவில் முதலாளித்துவத்திற்கு
வழிவகுக்கும். அதன் உடன் விளைவாக, பாட்டாளி
வர்க்கம் தோன்றி புரட்சி செய்யும் என நம்பினார். ஆனால், பிரிட்டனால் அழித்தொழிக்கப்பட்ட பாரம்பரியமான
தொழில்கள், தொழில்நுட்பங்கள்
பற்றியெல்லாம் காரல் மார்க்ஸ் கவலைப்படவில்லை. விளைவுகளை முன்நிறுத்துவது என்பது மேற்கத்திய
சிந்தனையின் கூறுதான். அதற்கு காரல் மார்க்சும் பலியாகியிருந்தார் என்பதே உண்மை….
நாம் அறம் சார்ந்த ஓர் போர்க்களத்தில் இருந்தால், அதற்காக நாம் முழுமையாக அர்பணிப்புணர்வுடன்
ஈடுபட்டால், எத்தகைய எதிரியையும்
வெல்ல முடியும்…
விடுதலைப்புலிகளின் எழுச்சி தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு
ஓர் உந்துசக்தியாக விளங்கியது. வெறும் போராட்டம் மட்டும் நடத்தாமல், மக்களுக்கான அரசாங்கத்தையும்
நடத்தியவர்கள் அவர்கள். எனினும், காட்டிக் கொடுத்தலாலும், கிறித்துவ, இந்து, புத்த, இஸ்லாமிய சக்திகளாலும் ஒன்றிணைந்து அழிக்கப்பட்டுவிட்டார்கள்.
நார்வே மூலமாக மேற்குலகமும் தமிழர்களுக்கு தீங்குவிளைவித்து விட்டது. இத்தகைய இக்கட்டான
நிலையிலும் தேசியத்தலைவவர் பிரபாகரன் ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியாமல் போராடி
தமிழர் மரபின் தொடர்ச்சியாக விளங்குகின்றார்.
தமிழர் மரபான முருகனும்,
திருவள்ளுவமும், வள்ளலாரும், வைகுண்டசாமியும் தமிழர்களின் பாரம்பரிய பெருமிதங்கள்.
இவர்களை விட்டுவிலகினால், நீங்கள்
தமிழர் மண்ணிலிருந்தும், இன,மொழி அடையாளங்களிலிருந்து பிடுங்கி எறியப்படுவீர்கள்…..