[ சனிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2011, 16:17 GMT ] [ கார்வண்ணன் ] |
![]() கொழும்புக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றிய றொபேட் ஓ பிளேக் சிறிலங்காவில் தனது பணிகளை முடித்து வெளியேறும் போது, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கடைசியாகச் சந்தித்த போதே அவர் ஐ.நா மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஆகியவற்றின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாக குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த அடுத்த நாள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. போர் முடிந்து விட்டதால் இனிமேல் சிறிலங்காவில் அனைத்துலக செஞ்சிலுவை குழுவுக்கு வேலை இல்லை என்றும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். போர் வலயத்தில் கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் விடயத்தில் ஐ.நா மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவை தொடர்புபட அனுமதிக்க முடியாது என்றும், அவர்களின் எதிர்மறையான அணுகுமுறையே அதற்குக் காரணம் என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார். அவர்களின் அறிக்கைகள் உணர்வுகளைக் கிளறி விடுவதுடன், பிளவுகளை அதிகமாக்கி, நல்லிணக்க வாய்ப்புகளை கெடுத்து விடும் என்றும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதனை வன்மையாக நிராகரித்த பிளேக், மனிதாபிமான நெருக்கடிகளின் போது அனைத்துலக செஞ்சிலுவைக் குழு சிறிலங்கா அரசுக்கு மகத்தான உதவிகளை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இருந்தபோதும் கோத்தாபய ராஜபக்ச அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவோ ஐ.நாவோ சிறிலங்கா அரசுக்கு உதவி வழங்கவில்லை என்று பதிலளித்துள்ளார். சிறிலங்கா அரசதரப்பில் சில குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்ட கோத்தாபய ராஜபக்ச, அனைத்துலக அமைப்புகளில் ஆசியர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்றும வலியுறுத்தியுள்ளார். அவர்களால் தான் சிறிலங்கா அரசாங்கத்தையும், இராணுவத்தையும் அதிகம் புரிந்து கொள்ள முடியும் என்றும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. |
Wednesday, September 14, 2011
கடைசிச் சந்திப்பில் மோதிக் கொண்ட கோத்தாபயவும் பிளேக்கும் –அம்பலப்படுத்துகிறது விக்கிலீக்ஸ்
Subscribe to:
Posts (Atom)